உலகில் உள்ள 5 விலை உயர்ந்த டீ வகைகள் பற்றிப் பார்க்கலாம் வாங்க!

Expensive tea in the world
Expensive tea in the worldImage Credits: servintegrales.com.co
Published on

லகில் அதிகமாக காபி பிரியர்கள் இருப்பது போலவே அதற்கு இணையாக டீ பிரியர்களும் உள்ளனர். டீ அருந்துவது மனதுக்கு ஒரு அமைதியை தரும். டீ அருந்துவது இருதயத்திற்கும், வயிற்றுக்கும் நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. உலகில் உள்ள அதிக விலைக்கொண்ட டீக்களை அதன் பாரம்பரியத்தை வைத்தும், தரத்தை வைத்தும் பிரிக்கிறார்கள். அத்தகைய 5  விலை அதிகமான டீ வகைகளைப் பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

1.டாஹாங்பாவ் (Da-hongpao)

டாஹாங்பாவ் டீ சீனாவின் தேசிய பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்த டீத்தூள் ஒரு கிலோ 1.2 மில்லியன் டாலராகும். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த டீ இதுவேயாகும். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான நிக்சன் சீனாவிற்கு வந்தபோது Mao zedong இந்த டீத்தூளை 200 கிராம் அவருக்கு பரிசாக அளித்தார். அமெரிக்கா- சீனாவிற்குமான நட்புறவை வெளிப்படுத்துவதற்காக என்றால் பார்த்து கொள்ளுங்கள். மிங்க் பரம்பரையில் உள்ள அரசன் தன் அம்மாவின் நோயை போக்குவதற்காக தன்னுடைய சிவப்பு அங்கியை கொடுத்து அதற்கு பதில் இந்த டீத்தூளை ஒரு ஜார் முழுவதும் பெற்று சென்றார். உலகத்திலேயே இன்னும் இந்த டீயின் 6 தாய் மரங்களே உள்ளன. 2005 ஆம் ஆண்டு, 20 கிராம் டீத்தூள் 30,000 டாலர்களுக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

2.பாண்டா டங்க் (Panda dung)

பாண்டா டங்க் டீயின் செடியை வளர்ப்பதற்கு பாண்டாவின் கழிவை உரமாக பயன்படுத்தப்படுகிறது. தென்மேற்கு சீனாவில் உள்ள இடத்தில் யான்ஷே என்னும் தொழிலதிபர் இந்த வகை டீத்தூளை பாண்டாவின் கழிவை உரமாக பயன்படுத்தி வளர்த்து அதை விற்பனைக்கு கொண்டு வந்தார். பாண்டாவின் கழிவில் நிறைய ஆரோக்கியம் தரும் நன்மைகளும்,  ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் உள்ளதால் மக்கள் இதை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த டீத்தூள் 1 கிலோ 70,000 டாலராகும்.

3.எல்லோ கோல்டு டீத்தூள் (Yellow gold tea)

எல்லோ கோல்டு டீத்தூள் அரிதானது மற்றும் அதிக விலை மதிப்புடையது. இந்த டீத்தூள் வருடத்திற்கு ஒரேயொரு முறையே அறுவடை செய்யப்படும். அப்படி அறுவடை செய்யும்போது தங்க கத்தரிகள் பயன்படுத்தப்படும். இந்த டீயின் இலைகளை சூரிய ஒளியில் உலர்த்தி எடுப்பார்கள். அதன் பிறகு உலர்த்தப்பட்ட தேநீர் இலைகளில் 24 karat சாப்பிடக்கூடிய தங்க துகள்களைத் தூவுவார்கள். இதன் விலை 1 கிலோ 7800 டாலர்களாகும். இந்த வகை டீத்தூள் சிங்கப்பூரில் மட்டுமே விற்கப்படுகிறது. இதை குடிப்பதால் வயதாவதை தடுப்பது (Anti ageing) மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகளையும் கொண்டிருக்கிறது.

4. சில்வர் டிப் இம்பீரியல் (Silver tip imperial)

இந்த வகை டீயின் இலைகளை எடுப்பதற்கு மிகவும் தேர்ச்சி பெற்றவர்களே செல்வார்கள். டார்ஜிலிங்கில் உள்ள மக்காய்பாரி டீ எஸ்டேட்டில் முழு நிலவு நாள் அன்று இரவிலேதான் இந்த டீயின் இலைகளை பறிப்பார்கள். இந்த டீயின் மொட்டு பகுதி வெள்ளி ஊசி போன்று இருக்கும். இந்த டீத்தூளில் இருந்து மாம்பழத்தின் வாசனை வரும். 2014ல் இந்த டீத்தூள் 1 கிலோ 1850 டாலர்கள் ஏலம் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுதான் இந்தியாவில் அதிக விலை உயர்ந்த டீத்துளாகும்.

இதையும் படியுங்கள்:
சுவையான இனிப்பு சீடையும், முட்டை காளானும் செய்யலாம் வாங்க!
Expensive tea in the world

5. கயோகுரோ(Gyokuro)

கயோகுரோ என்பதற்கு ‘முத்தால் ஆன பனித்துளி’ என்று பொருள். ஜப்பானில் யூஜ்ஜி மாநிலத்தில் வளர்க்கப்படும் இந்த டீ செடிகள்  மிகவும் விலை உயர்ந்த மற்றும் தரமான கிரீன் டீயாக கருதப்படுகிறது. வைக்கோலால் அமைக்கப்பட்ட பாயின் நிழலுக்கு அடியில் நான்கு வாரங்கள் இந்த டீ செடிகளை வளர்த்து அதில் சிறந்த தரமான இலையை பறிப்பார்கள். இப்படி செய்வதால் டீயின் இலையில் உள்ள L-theanine amino acids தக்க வைக்கப்படுகிறது. இதனால் இந்த டீயில் உள்ள உமாமி பிளேவர் அதிகரிக்கிறது. Kahei yamamoto VI என்பவர் 1835ல் தான் கயோகுரோ டீயை முதலில் கண்டுப்பிடித்தவர். இந்த டீ ஒரு கிலோ 650 டாலர்கள் விற்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com