நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் விரைவில் குணமடைய செய்ய வேண்டியவை! 

wound
What to do for diabetics to heal wounds faster!
Published on

நீரிழிவு நோய் என்பது உலக அளவில் பரவலாக காணப்படும் ஒரு நோய். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து காணப்படும் ஒரு நிலையாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள் குணமடைய அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் தொற்று நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. இந்தப் பதிவில் நீரிழிவு நோயாளிகளுக்கு காயம் விரைவில் குணமடைய உதவும் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். 

ஏன் காயம் மெதுவாக குணமடைகிறது? 

நீரிழிவு நோய் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹார்மோனான இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இன்சுலின், உடலின் செல்கள் குளுக்கோசை எடுத்துக்கொள்ள உதவுகிறது.‌ நீரிழிவு நோயால் போதுமான இன்சுலின் உற்பத்தி இல்லாததால், செல்கள் குளுக்கோசை சரியாக பயன்படுத்த முடிவதில்லை. இதன் காரணமாகவே காயம் குணமாவதில் தாமதம் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் ரத்த ஓட்டத்தை பாதிப்பதால் காயங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செல்வது கடினமாகிறது. மேலும், இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாகி தொற்றுக்கான அபாயம் அதிகரிக்கிறது. 

காயம் விரைவில் குணமடைய செய்ய வேண்டியவை: 

  • உங்கள் ரத்த சர்க்கரை அளவை வரம்பிற்குள் வைத்திருப்பது காயம் குணமடைவதற்கு மிகவும் முக்கியம். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டு, ஆரோக்கியமான உணவை உண்டு, வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள். 

  • தொற்று நோயை தடுக்க ஒவ்வொரு நாளும் காயத்தை சுத்தமான உலர்ந்த துணியால் துடைக்கவும். மருத்துவர்கள் பரிந்துரைத்தால் ஆன்டிபயாட்டிக் கிரீம் அல்லது கிருமி நாசினி பயன்படுத்தலாம். 

  • காயம் விரைவில் குணமடைய அதை ஈரப்பதமாக வைத்திருப்பது முக்கியம். ஒவ்வொரு நாளும் காயம் ஈரப்பதமாக இருக்கும்படி மருந்து தடவுங்கள். காயத்தில் அதிக அழுத்தம் இருந்தால் அது குணமாவதைத் தாமதப்படுத்தலாம். எனவே, காயப்பட்ட பகுதியை அழுத்தம் இல்லாதவாறு உயர்த்தி வைக்கவும். இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். 

  • காயம் குணமடைவதற்கு போதுமான புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. எனவே, பழங்கள், காய்கறிகள், புரதங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். காயம் விரைவில் குணமடைய போதுமான அளவு தூக்கம் தேவை. ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் தூங்குங்கள். 

  • மது, புகை போன்ற கெட்ட பழக்கங்களை கைவிடவும். இவை காயம் குணமடைவதை தாமதப்படுத்தி தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக புகைப் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்துவது நல்லது. 

உங்கள் காயம் குணமடைவதைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அவர்களது அறிவுறுத்தல்களை கவனமாகப் பின்பற்றுங்கள். இந்த விஷயங்கள் அனைத்தையும் நீங்கள் முறையாக பின்பற்றினாலே, எந்த காயமாக இருந்தாலும் அது விரைவில் குணமடையும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com