குழந்தை ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன செய்வது?

child
child
Published on

ஒரு குழந்தை பிறந்து தவழ்ந்து எழுந்து நடப்பது வரை ஒவ்வொரு பெற்றோரின் கண்காணிப்பும் அவசியமாகிறது. அதிலும் அந்த குழந்தை தவழும் போதும் தரையில் கிடக்கும் பொருட்களை எல்லாம் அதன் கையில் எடுத்து விளையாடும் போதும் மிக மிக அதிக கவனம் தேவைப்படுகிறது. காரணம் எந்த பொருள் கையில் கிடைத்தாலும் அதை தன் வாயில் வைப்பது பிறந்த குழந்தையின் இயல்பு.

அப்படி எடுக்கும் அந்த பொருட்கள் தவறிப் போய் வாயினுள் சிக்கி விழுங்கி விட்டால் அதன் பின் வரும் பின் விளைவுகள் மிகவும் வேதனை தரும் ஒரு விஷயமாக ஆகிவிடும். குழந்தை தவிப்பதை பார்த்து பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் அலைமோதுவதை பல சம்பவங்களில் பார்த்திருக்கிறோம். சமீபத்தில் கூட ரூபாய் நாணயம் விழுங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் பெரும் பாடுபட்டனர் என்ற செய்தி வந்திருந்தது.

சில சமயங்களில் கையில் கிடைத்த மாத்திரை, உயிருடன் உள்ள பூச்சிகள் போன்றவற்றை விளங்கிய குழந்தைகள் உயிர் பறிபோன பரிதாபங்களும் நிகழ்ந்துள்ளது இதை எப்படி தவிர்ப்பது? குழந்தைகள் ஏதேனும் பொருளை விழுங்கி விட்டால் அதற்கான முதலுதவி என்ன வாருங்கள் .இந்த பதிவில் காண்போம்

குழந்தைகள் கீழே கிடக்கும் எந்த பொருளையும் அது எந்த வகை என்று அறியாமல் மண் கல் விளையாட்டு பொருட்கள் ஸ்குரு போன்றவற்றை விழுங்கி விடும் அபாயம் உண்டு. அப்படி விழுங்கப்பட்ட பொருட்கள் நேராக மூச்சுக்குழாய் அல்லது உணவு குழாய் வழியாக தான் செல்லும். இதை தவிர்த்து சில சந்தர்ப்பங்களில் தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.

இதில் மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து கொண்டால் சுவாசம் தடைப்பட்டு மூச்சு விட சிரமம் ஏற்படும் அதுவே உணவு குழாய்க்குள் அந்த பொருள் சென்றால் இரப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும் . பாதிப்பற்ற இளகும் பொருட்கள் மலம் கழிப்பதன் மூலமே பெரும்பாலும் வெளியே வந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
சாவி, ஹேர் பின் காதில் போடுவீங்களா? நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறால் உயிருக்கே ஆபத்து!
child

அதே சமயம் ஸ்க்ரூ, பின், ஊக்கு, பிளேடு போன்ற மக்காத கூர்மையான பொருட்கள் விழுங்கி விட்டால் அது செல்லும் வழியில் உள்ள உள் உறுப்புகளில் காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இதற்கு காலம் தாழ்த்தாமல் மருத்துவரை சென்று சந்திப்பது அவசியம்.

சொல்லத் தெரியாத ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் ஒரு பொருளை விழுங்கி விட்டால் அதை எப்படி கண்டுபிடிப்பது ?

அந்த குழந்தை சாப்பிட மறுத்து அடம் பிடிக்கும் .நீரை அருந்தவும் மறுக்கும். தொடர்ந்து இருமி வாந்தி உண்டாகும். எதற்காக அழுகிறது என்பதே தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும். வயிற்று வலியால் துடிக்கும். முக்கியமாக மூச்சு விட சிரமமாக இருக்கும். இது போன்ற அறிகுறிகளை வைத்து முதலுதவி அல்லது மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும்.

முதலுதவி சிகிச்சை எப்படி செய்வது?

மருத்துவம் கூறும் ஆலோசனைப்படி ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களை உட்கார்ந்த நிலையில் கவிழ்த்து முதுகில் முதுகு பகுதியில் ஐந்து முறை பலமாக மேல் நோக்கி தட்ட வேண்டும் .அதன் பின் வாயைத் திறந்து பார்த்து பொருள் ஏதேனும் தெரிந்தால் வாய்க்குள் விரலை விட்டு அந்த பொருளை எடுக்கலாம் . ஆனால் அது மிதமான செயலாக இருக்க வேண்டும் வாய்க்குள் விரலை விடுவது என்பது மேலும் அந்த குழந்தைக்கு ஆபத்தை தராத வண்ணம் இருக்க வேண்டும்.

அப்படியும் அந்த பொருள் வராவிட்டால் குழந்தையை நமது மார்பில் பின்புறமாக அணைத்தவாறு சாய வைத்து நெஞ்சுக்கு கீழே , தொப்புளுக்கு மேலே உள்ள பகுதியில் நமது கைகளின் முஷ்டியினால் ஐந்து முறை மேல் நோக்கி தள்ள வேண்டும். இந்த முறையிலும் அந்த பொருள் வெளியே வரவில்லை வேறு வீட்டு சிகிச்சை செய்து பிரச்சினையை அதிகமாக்காமல் தாமதம் செய்யாமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது தான் நல்லது.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
child

தடுக்கும் முன்னெச்சரிக்கைகள் என்ன?

  • சில குழந்தைகள் பொம்மைகளில் பின்னே காணப்படும் சிறு பேட்டரி பட்டன் போன்றவற்றை விழுங்கும் வாய்ப்புகள் உண்டு என்பதால் பொம்மைகளை அவர்கள் கையில் தந்து விட்டு வேலைகளை கவனிக்க செல்லாமல் அருகிலேயே இருப்பது நல்லது

  • குழந்தை தவழும் இடங்களில் கட்டில் மற்றும் மேஜை அடிகளிலும் கண்காணிப்புடன் சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது.

  • குழந்தை தானே என நினைத்து காசு போன்ற பொருட்களை அவர்கள் எடுக்கும் அளவிற்கு அருகிலேயே வைப்பதை தவிர்க்க வேண்டும் முக்கியமாக கூர்மையான பொருட்களை அவர்கள் முன் பயன்படுத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

  • குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கிருமி நாசினி கொண்டு தரைகளை துடைத்து பூச்சி போன்றவைகள் வராமல் தடுக்க வேண்டும் குழந்தைகளுக்கு தெரியாது அது பூச்சி என்று ஏதோ அசைகிறது என்று அதை கையில் எடுத்து விழுங்குவது ஆபத்தானது.

குழந்தைகள் வளர்ந்து விபரம் அறியும் வரை பெற்றோரின் கூடுதல் கவனம் அவர்கள் மேல் இருப்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com