உங்களை நாய் கடித்துவிட்டால் பதற வேண்டாம்… இவற்றை சரியாக செய்தாலே போதும்! 

Dog Bite
Dog Bite
Published on

நாய்கள் நம்முடன் நட்புடன் பழகக் கூடியவை என்றாலும், சில சமயங்களில் அவை கடிக்கக்கூடும். அதனால், சிறிய காயம் முதல் பெரிய காயம் வரை ஏற்படுத்தலாம். நாய் கடித்தால் உடனடியாக முதலுதவி அளிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், இது நோய்த் தொற்றுகள், ராபிஸ் போன்ற தீவிர நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இந்தப் பதிவில் நாய் கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.‌ 

சில சமயங்களில் நாய் கடித்தால் அது பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, பாக்டீரியா தொற்று ஏற்பாட்டு, காயம் வீங்கி சிவந்து அதிகமாக வலிக்கத் தொடங்கும். சிலருக்கு ராபிஸ் எனப்படும் மிகவும் தீவிரமான நோய் உண்டாகும். இது நரம்பு மண்டலத்தை பாதித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்தும். பெரிய அளவிலான நாய் கடித்தால் தசைகள் கிழிந்து, எலும்பு முறிவு கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. 

நாய் கடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவை: 

உங்களை நாய் கடித்த உடன் பதற்றம் அடையாமல் காயத்தை நன்றாக சுத்தம் செய்யவும். குழாயைத் திறந்து விட்டு சோப் போட்டு நன்றாகக் கழுவவும். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், சுத்தமான துணியால் காயத்தின் மீது அழுத்திப் பிடிக்கவும். பின்னர், காயத்தை சுத்தமான துணியை வைத்து கட்டு போடவும். 

சிறிய காயமாக இருந்தாலும் கூட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது அவசியம். அங்கு மருத்துவர்கள் தடுப்பூசி போட பரிந்துரைக்கலாம். உங்களைகா கடித்த நாய் தெரு நாய் என்றால் ரேபிஸ் தடுப்பூசியை கட்டாயம் போட வேண்டும். 

குழந்தைகளைதான் பெரும்பாலும் நாய் கடிக்கும் என்பதால், உங்கள் குழந்தைகளுக்கு நாய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். பழக்கம் இல்லாத நாய்களை தொடவோ, சீண்டவோ கூடாது என்பதை அவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். பெரியவர்களும் அறிமுகம் இல்லாத நாய்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
40 வயதைக் கடந்த ஆண்கள் தங்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள 5 யோசனைகள்!
Dog Bite

நாயை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்கள் நாய்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். பொது இடங்களில் நாய்களை பாதுகாப்பின்றி விடக்கூடாது. நாய்களை அவ்வப்போது தவறாமல் பரிசோதித்து அவற்றிற்கு தேவையான தடுப்பூசிகளை முறையாகப் போட வேண்டும். 

நாய்க்கடி என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விஷயம் அல்ல. இது பல ஆபத்துக்களை ஏற்படுத்தும். எனவே, நாய் கடித்த உடன் உடனடியாக சரியான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கிய. மேலே குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நாய்க் கடியைத் தடுக்கலாம். நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com