நுரையீரலில் நச்சு சேராமல் இருக்க செய்ய வேண்டியவை! 

 lungs
Accumulation of toxins in the lungs!
Published on

நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் நுரையீரலும் ஒன்று. சுவாசம் மூலம் நாம் எடுத்துக் கொள்ளும் ஆக்சிஜனை உடலுக்கு வழங்கி, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவது நுரையீரலிலின் முக்கிய பணியாகும். நம்முடைய சுற்றுப்புறத்தில் நிறைய மாசுபாடுகள் இருப்பதால், நுரையீரல் நச்சுகளுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம். நுரையீரலில் நச்சு சேர்வதால், பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தப் பதிவில் நுரையீரலில் நச்சு சேராமல் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

நுரையீரலில் நச்சு சேர்வதால் ஏற்படும் பிரச்சனைகள்: 

நுரையீரலில் நச்சு சேர்வதால் சுவாசப் பாதையில் அழற்சி ஏற்பட்டு இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும், நீண்ட காலம் நுரையீரல் நச்சுக்கலுக்கு உட்பட்டால் நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட சுவாச நோய் போன்றவை ஏற்படக்கூடும். 

நுரையீரலில் உள்ள நச்சுக்கள் ரத்தத்தில் கலந்து இதயத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவைக் குறைக்கும். இதனால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். நுரையீரல் நச்சுக்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி சளி, காய்ச்சல் போன்ற தொற்றுக்களுக்கு ஆளாகும் வாய்ப்பை அதிகரிக்கும். 

நுரையீரலில் நச்சு சேராமல் இருக்க செய்ய வேண்டியவை: 

நுரையீரல் நச்சு என்பதும் முதலில் ஞாபகத்திற்கு வருவது புகைப்படக்கம்தான். புகைப்பிடித்தல் நுரையீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக முக்கியம். 

வாகன புகை, தொழிற்சாலை புகை போன்ற மாசுபட்ட காற்றை தவிர்ப்பது நுரையீரலுக்கு நல்லது. இத்துடன் வீட்டினுள் சுத்தமான காற்று வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். 

தூசி மற்றும் புகை நுரையீரலுக்கு அதிகப்படியான தீங்கை விளைவிக்கும். வெளியே செல்லும்போது தூசி மற்றும் புகையிலிருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
அரிசி உணவு சமைக்கும்போது செய்யக்கூடாத 5 தவறுகள் தெரியுமா?
 lungs

ஆரோக்கியமான உணவு நுரையீரல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். எனவே, பழங்கள் காய்கறிகள் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும். இத்துடன் வழக்கமான உடற்பயிற்சி நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். எனவே, தினசரி குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

உங்களுக்கு ஏதேனும் நுரையீரல் பிரச்சனை இருப்பது போல சந்தேகித்தால் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலமாக நுரையீரலில் உள்ள பிரச்சனையை தெரிந்து கொண்டு விரைவாக சரி செய்ய முடியும். 

காலையில் எழுந்ததும் யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற விஷயங்களை செய்வது மூலமாகவும் நுரையீரலை ஆரோக்கியமானதாக மாற்றலாம். இந்த விஷயங்களை நீங்கள் முறையாக கடைபிடித்து வந்தாலே, நுரையீரல் நச்சு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com