கல்லீரல் முறையாகச் செயல்படாவிட்டால்?அவ்வளவுதான் போங்க!

Liver
Liver
Published on

முகம் சுருங்காமல், முடி நரைக்காமல் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இன்றி நலமாக வாழ வேண்டும் என்பன அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஆசைகள் என்றால் அதை மறுக்க முடியாது. ஆனால், தற்போதைய நாகரீகமான வாழ்க்கைச் சூழலில் அவற்றை அடைவது என்பது கொஞ்சம் கடினமான செயல்தான். இருப்பினும் உங்கள் உடலில் உள்ள இந்த ஒரு உறுப்பை நன்றாகப் பராமரிப்பதன் விளைவாக இவை அனைத்தும் பெற முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

கல்லீரலின் செயல்பாடுகள்:

  • நமது உடலில் உள்ள உறுப்பான கல்லீரலை முறையாகப் பார்த்துக் கொள்வதன் மூலம் நமது வாழ்வை நலமாக வாழலாம். ஏனெனில், கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய உறுப்பாகும். இது இரத்தத்தில் கலக்கும் கொழுப்புகளை உடைக்கிறது. செரிமான செயல்பாட்டின்போது, கழிவுகளை அகற்ற உதவுகிறது.

  • மேலும், இது இரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் துகள்கள் கலந்திருந்தால் அவற்றை நீக்கி இரத்தத்தை வடிகட்டுகிறது.

  • சிறுகுடலில் இருந்து ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகிறது.

  • கல்லீரல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும், வெள்ளையணுக்கள் மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தியில் கல்லீரலே மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

  • தசை மற்றும் எலும்புகளை வலிமைப்படுத்தவும் செல்களை மறு சீரமைப்பு செய்யவும் அதிகமான புரதம் நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த புரதத்தை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் அமினோஅமிலங்களில் பெரும்பகுதியை கல்லீரல் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மீதமுள்ள அமினோ அமிலங்கள் நாம் உண்ணும் உணவுகளின் வாயிலாக நமக்கு கிடைக்கிறது.

  • கல்லீரல் புரதம் மற்றும் என்சைம்களை உற்பத்தி செய்கிறது. இது நீண்ட காலம் நம்மை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

  • கல்லீரல் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஏனெனில், இது அதிகப்படியான குளுக்கோஸை கிளைக்கோஜனாக மாற்றுகிறது. மேலும், குளுக்கோஸ் நம் உடலுக்குத் தேவைப்படும்போது, குளுக்கோஸை வழங்கும் மூலமாகவும் இது செயல்படுகிறது.

  • கல்லீரல், காயம் ஏற்படும் சமயங்களில் இரத்தம் உறைவதற்கு உதவும் பொருள்களை உற்பத்தி செய்கிறது. இதயன் வாயிலாக, அதிகப்படியான இரத்தம், காயம் ஏற்பட்ட இடத்தில் இருந்து வெளியேறாமல் தடுக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுத்தும் விளைவுகள்!
Liver

கல்லீரல் முறையாகச் செயல்படாவிட்டால்..?

  • கல்லீரல் சரியாக செயல்பாடாமல் போனால் இரத்தத்தில் கொழுப்புகள் அதிகமாக கலந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

  • உடலில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படலாம். இதன் விளைவாக, உடல்பருமன், முகம் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் முடி கொடுத்தால், நரைத்தல் போன்றவைகளும் ஏற்பட வலுவாக்குக்கும்.

  • எளிதாக நோய்த்தொற்றுகளின் தாக்குதலுக்கு ஆளாகலாம்.

  • கல்லீரல் முறையாகச் செயல்படாவிட்டால் சர்க்கரை நோய் வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம், மது மற்றும் பிற போதை பழக்க வழக்கங்கள், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளை உண்பது, ரசாயனங்கள் கலந்த உணவுகள் மற்றும் துரித உணவுகளை எடுத்துக் கொள்வது போன்றவை கல்லீரலை அழிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. இவற்றையெல்லாம் முடிந்த வரையில் தவிர்த்து, கல்லீரலை முறையாகப் பராமரித்தலே இளமையாகவும், நோய்கள் இன்றி ஆரோக்கியமாகவும் நம்மால் வாழ முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com