உங்கள் மூளையை நீங்களே குழப்பாதீங்க!

Brain Confusion
Brain Confusion
Published on

நம் அன்றாட செயல்களை சிறப்பாக செய்ய முக்கிய பங்கு வகிப்பது நம் மூளைதான். மூளை சரியான முறையில் இயங்கினால் மட்டுமே நாமும் சரியான பாதையில் செல்ல முடியும். இவ்வாறு நம் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்கும் மூளையை நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்கள் மூலம் குழம்ப செய்கிறோம் என்பதை கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

நம்முடைய தினசரி நடிவடிக்கையில் செய்கின்ற சில செயல்கள் நமக்கே தெரியாமல் நம்முடைய மூளையின் செயல்பாட்டை பாதிக்குமாம். அப்படி என்ன பழக்கவழக்கம்? என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

காலை உணவு

நம் அன்றாட பழக்கவழங்களில் முக்கியமானது காலை உணவு. நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை முறையாக எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. காலை உணவை அதிகமாகவும், மத்திய உணவை (காலை உணவு) அதை விட குறைவாகவும், இரவு உணவை (மதிய உணவு) அதையும் விட குறைவாகவும் எடுத்து கொள்ள வேண்டும் என்ற வரையறையே உண்டு. ஆனால், பலர் காலை உணவை தவிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு காலை உணவை தவிர்த்தால் மூளை நம்முடைய பசி மற்றும் உணவு சுழற்சியில் குழம்பி விடுமாம்.

இதையும் படியுங்கள்:
கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த விஷயங்களை சொல்லாதீர்கள்!
Brain Confusion

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது கேடு தரும், உயிரை கொல்லும். இதுபோன்ற எத்தனை வரிகள் சொன்னாலும், புகைபிடிப்பவர்கள் திருந்துவது அரிதாகவே இருக்கிறது. புகைப்பிடிப்பவர்களின் மூளையின் செயல்பாட்டில், நிறைய மாற்றங்கள் ஏற்படுமாம்.

தூக்கமின்மை

ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது கடமையாக இருக்க வேண்டும். ஆனால், தூக்கத்தை தொலைப்பவர்கள் இங்கு அதிகம். போதிய அளவு தூக்கமின்மையாலும் மூளையின் செயல்பாட்டில் சிக்கல்கள் உண்டாகுமாம்.

மல்ட்டிடாஸ்க்

சிலர்  ஒரு வேலை செய்துக்கொண்டே மற்றொரு வேளையிலும் கவனம் செலுத்துவதுண்டு. ஒரே நேரத்தில் நிறைய வேலைகள் செய்தாலும் மூளை குழம்பி போகுமாம்.

நீர்ச்சத்து குறைபாடு

தண்ணீர் அருந்துவதற்கு சிலரிடம் ஞபாகப்படுத்தும் நிலை இருக்கிறது. உடலிற்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்காத போதும் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுமாம்.

மொபைல் போன் பார்ப்பது

எல்லா நேரங்களிலும் கண்கள் மொபைல் போனை விட்டு விலகாத வண்ணம் நம் பழக்கவழக்கங்கள் மாறி விட்டது. அந்த வகையில், நாம் சூரிய ஒளியின் கீழ் நின்று கொண்டு மொபைல் போன் பார்த்தால் மூளை பாதிக்குமாம்.

ஓய்வு

உடல் நலம் சரியில்லாத நேரங்களில், ஓய்வு எடுக்காமல் வேலை செய்தாலும் மூளையில் பாதிப்பு உண்டாகுமாம்.

இவ்வாறு நம் அன்றாட வாழ்வில் செய்யும் தவறுகள் மூளையை பெரிதளவில் பாதிக்கும் என்பதை அறிந்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com