Fruits and Vegetables
Which foods are good to eat raw?

இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடுவதுதான் பெஸ்ட்! 

Published on

தினசரி ஆரோக்கியமான உணவுகளை உண்பது நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, நாம் சாப்பிடும் உணவுகளை எவ்வாறு சமைத்து சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளைத் தரும் என்பது பலருக்குத் தெரியாது.‌ பச்சையான உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், இவை உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. இந்தப் பதிவில் எதுபோன்ற உணவுகளை நாம் பச்சையாக சாப்பிடுவது ஆரோக்கியமானது என்பது பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகள்: 

பல வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக சாப்பிடலாம். இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. 

கீரைகள்: கீரைகளில் நார்ச்சத்து, வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகளைக் கொண்டவை. பச்சையாக கீரை சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. 

கேரட்: கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அத்தனையும் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கிறது.‌ 

ஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் பல ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. 

ஸ்ட்ராபெரி: ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் நார்ச்சத்து, வைட்டமின் சி உள்ளிட்டவை இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மூளை செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. 

பூசணிக்காய்: பூசணியில் வைட்டமின் ஏ, சி, இ நிறைந்துள்ளது. இது சருமத்திற்கு நல்லது. இதை தொடர்ச்சியாக உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

இஞ்சி, பூண்டு, வெங்காயம்: இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றையும் நீங்கள் பச்சையாக அப்படியே சாப்பிடலாம். இதனால், உங்கள் செரிமான ஆற்றல் மேம்படுவது முதல், பல்வேறு விதமான நோய்கள் தடுக்கப்படுவது வரை பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.‌

இதையும் படியுங்கள்:
சிறுதானிய உணவு சாப்பிடத் தொடங்குவதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை!
Fruits and Vegetables

மேலே, குறிப்பிட்ட உணவுகளை பச்சையாகவே சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு, பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. எனவே, இன்று முதல் உங்கள் உணவு முறையில் பச்சையான உணவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். 

logo
Kalki Online
kalkionline.com