சிறுநீரகக் கல் பிரச்னைக்கு நிவாரணம் தரும் வெண்பூசணி சாறு!

white pumpkin juice relieves kidney stones
white pumpkin juice relieves kidney stoneshttps://www.youtube.com

வெண்பூசணியில் வைட்டமின் ஏ சத்து ஏராளமாக நிரம்பி இருக்கின்றன. அதனால் சீரான கண் பார்வைக்கும், கண் கோளாறுகளை சரி செய்யவும் இது உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் பி, சி சத்துக்கள் உள்ளதால் உடம்பில் உள்ள சூட்டை குறைத்து குளிர்ச்சியை தருகிறது. அதேசமயம் இருமல் இருந்தாலும் குணப்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு வெண்பூசணி மிகவும் உதவிகரமாக இருக்கும். அது மட்டுமின்றி, இரும்புச் சத்து குறைபாட்டை தீர்க்கும் வல்லமை வெண்பூசணிக்கு உண்டு. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் வெண்பூசணிச்சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் தூக்கம் சுகமாய் வரும். அதுமட்டுமின்றி, தீப்புண்களை ஆற்றும் தன்மை வெண்பூசணிக்கு உண்டு.  அதேபோல, கொப்பளங்களையும் இது குணப்படுத்துகிறது. பித்தத்தையும் தணிக்கிறது.

வெண் பூசணி சாற்றை தலைக்கு தடவி குளிப்பதால் தலைமுடி கொட்டுவது நிற்கும். தலையையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். பசியைத் தூண்டுவதுடன் குடல் சம்பந்தமான பிரச்னைகளையும் வெண்பூசணி நிவர்த்தி செய்கிறது. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அருமருந்து வெண்பூசணி.

இதையும் படியுங்கள்:
புகை, மது போன்று தீமை தரும் மேலும் நான்கு விஷயங்கள் எவை தெரியுமா?
white pumpkin juice relieves kidney stones

சிறுநீரகக் கற்களால் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் மூன்று வேளை என பத்து நாட்களுக்கு வெண்பூசணி சாற்றை குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். அதேபோல், பெண்களின் வெள்ளைப்போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.

புண்களை ஆற்ற, தழும்புகளைக் காணாமல் போகச் செய்யவும் வெண்பூசணிக்காய் பயன்படுகிறது.  நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கவும் வெண்பூசணி பயன்படுகிறது. நமது வழக்கமான உணவில் வெண்பூசணியை சேர்த்துக் கொள்வது புற்றுநோயை எதிர்த்து போராட உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com