உங்கள் நகங்களில் வெள்ளை புள்ளிகள் மற்றும் கோடுகள் இருக்கா? அச்சச்சோ!

nails
White spots and Streaks on your nails reasons.

நகங்களில் வெள்ளை கோடுகள் மற்றும் புள்ளிகள் இருப்பது லுகோனைக்கியா என்று அழைக்கப்படும் ஒரு பொதுவான நிலையாகும்.‌ இதைப் பற்றி பொதுவாக அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், சில சந்தர்ப்பங்களில் இது ஒரு தீவிர மருத்துவ நிலையில் அறிகுறியாக இருக்கலாம். எனவே இதுபோன்ற அறிகுறிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

நகங்களில் வெள்ளை கோடுகள் மற்றும் புள்ளிகள் ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள்: 

நகங்களில் காயம் ஏற்பட்டால் இத்தகைய வெள்ளை நிற மாற்றத்திற்கு வழிவகுக்கும். மேலும் சில தொற்றுகள், புஞ்சை போன்றவற்றாலும் இத்தகைய நிலை ஏற்படலாம். 

துத்தநாகம் இரும்பு அல்லது புரதச்சத்து போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் லுகோனைக்கியாவிற்கு வழிவகுக்கும். சில மருந்துகள் ஆர்செனிக் மற்றும் ஆன்ட்டிமோனி போன்றவை பக்கவிளைவாக இந்த பாதிப்பை ஏற்படுத்தும். 

சிறுநீரக செயலிழப்பு, சிரோசிஸ் போன்ற சில தீவிர மருத்துவ நிலைகள் காரணமாகவும் இத்தகைய அறிகுறி நகங்களில் தெரியலாம். 

திடீரென நகங்களில் வெள்ளை கோடுகள் மற்றும் புள்ளிகள் ஏற்பட்டால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் அவை தொடர்ந்து இருந்தால் அல்லது உங்களுக்கு உடலில் பிற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். அதன் அடிப்படை காரணத்தைத் தெரிந்துகொள்ள பரிசோதித்து பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை. 

லுகோனைக்கியாவிற்கு சிகிச்சை அளிப்பது என்பது அது எதனால் ஏற்பட்டது என்பதைப் பொறுத்ததாகும். காயம் அல்லது தொற்று காரணமாக இருந்தால் அது தானாகவே சரியாகிவிடும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருந்தால் உங்கள் மருத்துவர் ஊட்டச்சத்து சப்லிமென்ட் எடுக்க பரிந்துரைக்கலாம். அல்லது வேறு ஏதேனும் மருந்துகள் காரணமாக இருந்தால் உங்கள் மருத்துவர் வேறு மருந்துகளை மாற்றிக் கொடுப்பார்கள். ஏதேனும் தீவிர மருத்துவ நிலையினால் அது ஏற்பட்டால், அந்த பாதிப்பை சரி செய்ய உரிய சிகிச்சை எடுப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!
nails

உங்கள் நகங்களில் வெள்ளை கோடுகள் மற்றும் புள்ளிகள் ஏற்படுவதைத் தடுக்க நகங்களை காயப்படுத்தாமல் கவனமாக இருங்கள். அவ்வப்போது உங்கள் கைகளைக் கழுவி எப்போதும் அவை உளர்ந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். எல்லா விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமநிலையான உணவை உண்ணுங்கள். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் மருத்துவ நிலைமைகள் இருந்தால் அவற்றை முறையாக நிர்வகித்து, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும். 

இவற்றை சரியாகப் பின்பற்றி வந்தாலே, நகங்களில் இத்தகைய அறிகுறிகள் ஏற்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com