Hepatitis D நோயை புற்றுநோயாக அறிவித்த WHO! ஏன்?

Hepatitis D
Hepatitis D
Published on

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின் படி, உலகளவில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒருவர் ஹெபடைடிஸ் அல்லது கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கின்றார். இந்த தகவல் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தாலும் சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வதும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், புற்றுநோயை தவிர்க்கலாம்.

கல்லீரலை மோசமாக பாதிக்கும் ஆபத்து கொண்டது ஹெபடைடிஸ் டி நோய். இதில் ஹெபடைடிஸ் A, B, C, D, E என ஐந்து நோய் வகைகள் உள்ளன.

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC), ஹெபடைடிஸ் டி ஐ புற்றுநோயாக அறிவித்தது.

கடந்தகால தரவுகளின் படி, ஹெபடைடிஸ் பி மற்றும் சி வகை நோய்கள், புற்றுநோயாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஹெபடாலஜி ஜர்னல் மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில், 'உலகளவில் ஹெபடைடிஸ் பி நோயால் பாதிக்கப்பட்டவர்களில், சுமார் 5% அதாவது சுமார் 1.20 கோடி மக்கள் ஹெபடைடிஸ் டி கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.' என்று தெரிவித்துள்ளது.

கல்லீரலில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் டி நோய், ஹெபடைடிஸ் டி வைரஸால் (HDV) ஏற்படுகிறது. இந்த வைரஸ், ஹெபடைடிஸ் பி வைரசில் (HBV) இருந்து வெளிப்படுகிறது. இந்த நோய் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தை 2 முதல் 6 மடங்கு அதிகரிக்கிறது. இது கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது. ஹெபடைடிஸ் டி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் அல்லது பிற உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது.

ஹெபடைடிஸ் டி அறிகுறிகள்:

ஹெபடைடிஸ் டி நோய் பொதுவாக மஞ்சள் காமாலையின் அறிகுறிகளையே கொண்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலில் இரத்த அளவு குறைதல், மஞ்சள் நிற கண்கள், சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாக மாறுவது, சோர்வு, மஞ்சள் காமாலை, வயிற்று வலி மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகளை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
வீரப் பெண்மணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ராணி சதி மந்திரை பற்றி தெரியுமா?
Hepatitis D

ஹெபடைடிஸ் டி பரவுதல்:

  • ஏற்கனவே ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஹெபடைடிஸ் டி பரவும் ஆபத்து அதிகம்.

  • ஹெபடைடிஸ் டி யால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய ஊசியை, மற்றவருக்கும் பயன்படுத்துவதால் பரவும்.

  • ஹெபடைடிஸ் பி அல்லது டி நோயால் பாதிக்கப்பட்டவருடன் உடல்ரீதியான உறவு வைத்துக் கொள்பவர்களுக்கும் பரவும்.

  • இந்த நோயால் பாதிக்கப்பட்டவருடன் உடன் இருக்கும் மனிதர்களுக்கும் பரவும் வாய்ப்பு உண்டு.

  • சுகாதாரப் பணியாளர்களுக்கும் நோயாளிகளிடம் இருந்து பரவலாம்.

  • ஹீமோடையாலிசிஸில் உள்ள நோயாளிகளுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஹெபடைடிஸ் டி யிலிருந்து மீளுதல்:

இரத்த பரிசோதனைகள் மூலம் ஹெபாடைடிஸ் டியை கண்டறியலாம். கூடுதலாக, கல்லீரல் செயல்பாடு சோதனைகள் (LFT), அல்ட்ராசவுண்ட் அல்லது பிற இமேஜிங் சோதனைகள் மூலமும் கண்டறிகிறார்கள். ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று ஏற்படும் போதே பாதுகாப்பு நடவடிக்கைகளை சரிவர மேற்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலமும், சில பாதுகாப்பான பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோயை தவிர்க்க முடியும்.

இதையும் படியுங்கள்:
ஜெலோ நைட் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: நவீன வசதிகளுடன் வெறும் 59 ஆயிரம்தான்
Hepatitis D

ஹெபடைடிஸ் டி சிகிச்சை:

இந்த நோய்க்கு இன்னும் முழுமையான மருத்துவம் இல்லை, சில மருந்துகள் கல்லீரல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும். ஆயினும் ஒரு சிலர் அரிதாக குணமாகியும் உள்ளனர். முன்கூட்டியே ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போடுவதன் மூலம் ஹெபடைடிஸ் டி வராமல் பாதுகாக்கலாம். உயிருக்கு மோசமான சூழலில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் சிலருக்கு தேவைப்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com