யாரெல்லாம் அகுபிரஷர் செருப்புகளை உபயோகிக்கக் கூடாது?

யாரெல்லாம் அகுபிரஷர் செருப்புகளை உபயோகிக்கக் கூடாது?

ற்காலத்தில் நிறைய பேர் பரவலாக அகுபிரஷர் செருப்புகளை உபயோகிக்கின்றனர். இந்த அகுபிரஷர் செருப்புகள் பாதத்தில் உள்ள சில குறிப்பிட்ட பிரஷர் பாயிண்டுகளை அழுத்துவதால் உடல் முழுக்க சீரான இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. உடலில் உள்ள பல வலிகள் குறைகிறது. உடல் வலி இல்லாமல் இருப்பதால் மனதிற்கு அமைதியை தருகிறது. நன்றாக தூக்கமும் வருகிறது. உடலில் உள்ள அனைத்து எனர்ஜி லெவல்களையும் நன்றாக வைத்திருக்கிறது என்கின்றனர்.

அதேசமயம் இந்த வகை செருப்புகள் எல்லோரும் அணிய ஏற்றதல்ல. யாரெல்லாம் அணியக்கூடாது? சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், காலில் புண் இருப்பவர்கள், பித்த வெடிப்பு இருப்பவர்கள், கால் ஆணி உள்ளவர்கள் இந்த வகை செருப்புகளை பயன்படுத்தவே கூடாது. சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் புண் இருந்து, இதை அணிந்தால் புண் மேலும் அதிகமாகி ஆறுவதற்கு சிரமப்பட நேரும். கால் ஆணி உள்ளவர்களும் இந்த செருப்புகளை அணியக்கூடாது. ஏனெனில் வலி அதிகரித்து, கால் ஆணியும் பெரிதாகி விடும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தலைசுற்றல், மயக்கம் வரலாம்.

எல்லோருடைய பாத அமைப்புகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மென்மையான பாதம் உள்ளவர்களுக்கு இந்த வகை செருப்புகள் அதிக அளவில் வலியை ஏற்படுத்தும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு இன்னும் நிலைமை மோசமாகும். மேலும், இந்த செருப்புகளை மிக மிக சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு சின்ன அசுத்தம் இருந்தாலும் அது உடல் நலனை வெகுவாக  பாதிக்கும். மேலும், அறிவியல்பூர்வமாக இந்த செருப்புகளை அணிந்தால் நல்லது என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அகுபிரஷர் செருப்புகளை உபயோகிக்கும் முன் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நலம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com