இந்த மாவை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் அவ்வளவு தான்! 

Corn Flour
Why Diabetic People Should Not Eat Corn Flour
Published on

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க அவர்களின் உணவை முறையாக நிர்வகிக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு பிடித்த சில உணவுகளை மிதமாக எடுத்துக் கொள்வது தவறில்லை என்றாலும், ஒரு சில உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம். அதில் ஒன்றுதான் சோள மாவு. நீரிழிவு நோயாளிகள் சோள மாவு உட்கொள்ளும்போது பல்வேறு வகையான தொந்தரவுகளை சந்திக்க நேரிடலாம். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம். 

  • அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ்: சோள மாவில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. அதாவது இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். இத்தகைய உணவுகள் விரைவாக செரிக்கப்பட்டு ரத்தத்தில் கலப்பதால், ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸின் அளவு விரைவாக உயர வழிவகுக்கும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்புகளைக் கொடுக்கலாம்.

  • நார்ச்சத்துக் குறைபாடு: சோள மாவு பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக அதன் இயற்கையான நார்ச்சத்து நீக்கப்படுவதால், குளுக்கோஸ் உறிஞ்சுதல் அதிகரிக்கிறது. எனவே போதுமான அளவு நார்ச்சத்து இல்லாத சோளமாவை எடுத்துக் கொள்வதால், அதிக ரத்த சர்க்கரைக்கு வழிவகுக்கும். 

  • கார்போஹைட்ரேட் உள்ளடக்கம்: சோள மாவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளது. அவை செரிமானத்தின்போது குளுக்கோஸாக உடைபட்டு, நீரிழிவு நோயாளிகள் தங்களின் ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதைத் தடுக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் அவர்களின் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கண்காணிக்க வேண்டும். 

  • பதப்படுத்துதல்: கடைகளில் கிடைக்கும் வணிக ரீதியான சோள மாவு தயாரிப்புகளில், சர்க்கரைகள் மற்றும் கூடுதல் சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இது சோளமாவில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவை மேலும் அதிகரித்து, நீரிழிவு நோயாளிகளுக்கு சவால்களை அதிகரிக்கலாம். எனவே ரத்த சர்க்கரை அளவை திறம்பட நிர்வகிக்க நீங்கள் உட்கொள்ளும் உணவைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக பாக்கெட் பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால், அதன் லேபிளை கவனமாகப் படித்து, அதில் என்னென்ன கலக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து உட்கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
முன்கூட்டியே மாவு அரைக்த் தேவையில்லை இந்த Benne தோசைக்கு.. அதெப்படிங்க?
Corn Flour

இது தவிர, எந்த மாவு பொருளாக இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக சர்க்கரை நோயால் கிட்னி பாதிப்பு உள்ளவர்கள், இத்தகைய மாவு பொருட்களை குறைவாகவே எடுத்துக் கொள்வது நல்லது. இவற்றைத் தவிர்த்து, நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com