உங்க குழந்தைக்கு அடிக்கடி இருமல் வருதா? ப்ளீஸ், சாதாரணமா எடுத்துக்காதீங்க! 

Coughing Child
Coughing Child
Published on

மழைக்காலம் என்றாலே குழந்தைகளுக்கு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் வந்துவிடும் என்பது பெற்றோர்களுக்குத் தெரிந்ததே. குறிப்பாக ஆஸ்துமா பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை இன்னும் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஈரப்பதம் அதிகரிப்பது, பூஞ்சைகள், பாக்டீரியாக்கள் வளர்வது போன்ற காரணங்களால் நுரையீரல் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

மழைக்காலத்தில் ஏன் குழந்தைகளுக்கு இருமல் அதிகமாக வருகிறது?

மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் வளர உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. இந்த நுண்ணுயிரிகள் காற்றில் கலந்து குழந்தைகளின் சுவாச மண்டலத்தை அடைந்து, அழற்சியை ஏற்படுத்தி இருமல், சளி போன்ற அறிகுறிகளை உண்டாக்குகின்றன.

  • மழைக்காலத்தில் குளிர்ச்சியான வானிலை, குறைந்த காற்றோட்டம் மற்றும் அதிக ஈரப்பதம் ஆகியவை பாக்டீரியாக்கள் வளர உகந்த சூழலை ஏற்படுத்துகின்றன. இவை குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

  • சாதாரண குளிர்ச்சியான காலங்களில் பரவும் வைரஸ்கள் மழைக்காலத்தில் வேகமாக பரவுகின்றன. இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, அடிக்கடி நோய்வாய்ப்படச் செய்யும்.

  • மழைக்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிக்கும். இதில் உள்ள நச்சுப் பொருட்கள் குழந்தைகளின் சுவாச மண்டலத்தை பாதித்து, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

  • ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு மழைக்காலம் மிகவும் சவாலான காலமாக இருக்கும். மழைக்காலத்தில் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் காற்று மாசுபாடு ஆஸ்துமா தாக்குதலைத் தூண்டும்.

இதையும் படியுங்கள்:
குழந்தை பருவத்தில் இருந்தே மன ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்!
Coughing Child

குழந்தைகளுக்கு இருமல் ஏற்படுவதை எப்படி தடுப்பது?

  • வீட்டை அடிக்கடி சுத்தம் செய்து தூசியை நீக்க வேண்டும். படுக்கை விரிப்புகள், திரைச்சீலைகளை அடிக்கடி கழுவி வேண்டும்.

  • டிஹுமிடிஃபையர் பயன்படுத்தி வீட்டில் உள்ள ஈரப்பதத்தை குறைக்கலாம். வீட்டிற்குள் போதுமான காற்று செல்லும் வகையில் ஜன்னல்களை திறந்து வைக்கவும்.

  • குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன், பின் மற்றும் கழிவறைக்கு சென்ற பிறகு கை கழுவ சொல்லுங்கள். குழந்தைகளை நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருக்க சொல்லுங்கள்.

  • காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும்போது வெளியில் செல்லும்போது குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கவும். குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் போட வேண்டும். குழந்தைகளுக்கு சீரான உணவு கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்.

மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு இருமல், சளி ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், சில சமயங்களில் இது நுரையீரல் தொற்றுக்கு வழிவகுத்து விடும். எனவே, குழந்தைகளை நன்கு கவனித்துக்கொண்டு, மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நுரையீரல் தொற்றை தடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com