சிலரை மட்டும் ஏன் இந்த கொசுக்கள் குறிவைத்து கடிக்கின்றன? ஆய்வில் புதிய தகவல்!

Mosquito
Mosquito
Published on

நமது ஏகப்பட்ட எதிரிகளில் முதல் எதிரி இந்தக் கொசுதான். இந்த எதிரியை ஒழிக்க எத்தனையோ முயற்சிகளை செய்தாலும், இறுதியில் அவை பலனில்லாமல் போய்விடுகின்றன. நாம் கூட்டத்தில் இருந்தாலும், நேராக நம்மை குறிவைத்து தாக்குவதில் அந்த கொசுக்கு அப்படி என்ன சந்தோஷம்? ஏன் இந்த கொசுக்கள் கூட்டத்தில்கூட நம்மிடம் சரியாக வந்துவிடுகிறது என்று சிந்தித்தது உண்டா?

மிகச் சிறியதாக இருந்துக்கொண்டு கொடிய வேலை பார்க்கும் இந்த கொசுக்கள், பெரிய அளவு நோய்களையும் பரப்பிவிடுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில், அதிக அளவு கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோயையும் உண்டாக்குகின்றன. இதனை தடுக்க பல முன்னேற்பாடுகள் செய்தாலும் கூட, கிடைத்த சிறிய ஓட்டைகளிலெல்லாம் உள் நுழைந்து நம்மை டார்க்கெட் செய்கின்றன.

இவை ஏன் மனிதர்களை இந்த அளவு கடிக்கிறன என்றும், குறிப்பாக ஒருவரை மட்டும் அதிகளவு ஏன் கடிக்கின்றன என்றும் பார்ப்போம்.

கொசுக்களால் வாசனை மற்றும் நிறம் ஆகிய இரண்டையும் உணர்ந்து கண்காணிக்க முடியுமாம். அதுவும் நீங்கள் அணிந்திருக்கும் உடையின் நிறமோ அல்லது உங்களின் வாசனையோதான் உங்களை அவை அதிகமாக தாக்க காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒருவரை மட்டும் அதிகம் தாக்க நிறைய காரணங்கள் உள்ளன என்று வாஷிங்டன் பல்கலைகழக நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் ஒன்றுதான் நிறம். அதுவும் சிவப்பு, கருப்பு போன்ற நிறங்கள் கொசுக்களை ஈர்ப்பதாகவும், பச்சை, வெள்ளை போன்ற நிறங்களை கொசுக்கள் விரும்புவதில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மற்றொரு காரணம் வாசனை. இப்படி வாசனையைக் கொண்டு பெண் கொசுக்கள் தான் அதிகம் கடிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதுவும் வியர்வையில் இருந்து வெளியேற்றப்படும் வாசனை, கெமிக்கல்கள் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு போன்றவற்ளின் வாசனையைக் கொண்டு கொசுக்கள் மனிதர்களை குறி வைத்து தாக்குகின்றன. பழங்களின் இனிப்புச் சுவையின் வாசனையால் ஈர்க்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
அண்ணாமலை சர்வதேச அரசியல் படிக்க லண்டன் செல்கிறார்… பதவியின் நிலை என்ன?
Mosquito

பல காரணங்களுள் இந்த காரணத்தைதான் நாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். கொசுக்களுக்கு கற்கும் திறன் அதிகம் உள்ளதாம். இதனால்தான் நேர்மறை மற்றும் எதிர்மறை தொடர்புகளை வேறுபடுத்தி அறிய முடிகிறது. இதைக் கொண்டு தான் கொசுக்கள் மீண்டும் மீண்டும் ஒருவரைக் கடிக்க கற்று கொள்கின்றனவாம். ஒருவேளை அவற்றை நாம் அடிக்காமல் , ஊதிவிட்டால், மீண்டும் அவை நம்மை கடிக்க வருமாம்.

ஒரு உயிரைக் கொல்லக்கூடாது என்ற ஒரே காரணத்தினால், அதை ஊதிவிட்டால், கொழுப்புவாய்ந்த கொசு மீண்டும் கடிக்குமாமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com