சாப்பிட்டவுடன் நம் நாக்கு ஏன் இனிப்பை தேடுகிறது?

இனிப்பு
இனிப்பு
Published on

நம்மில் அனைவருககும் முழுமையான கல்யாண சாப்பாடு அல்லது வீட்டில் விருந்து சாப்பிட்ட பிறகு, இனிப்பு (ஸ்வீட்) அல்லது ஐஸ் கிரீம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இதற்கு சில விஞ்ஞான reasons இருக்கின்றன.

1. உடல் ருசியை சமநிலைப்படுத்த முயற்சி:

தமிழ் கலாச்சார உணவு முறையில், கல்யாண சாப்பாட்டில் காரமான, புளிப்பான, உவர்ப்பான சுவைகள் அதிகம் இருக்கும். இனிப்பான பகுதியான பாயசம், லட்டு, ஜிலேபி போன்றவை) உணவின் முடிவில் பறிமாறப்பட்டு சாப்பிட்டவுடன், ருசி சென்ஸர்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.

2. கார்போஹைட்ரேட் (Carbohydrate) ஏற்றம் மற்றும் இன்சுலின் (Insulin) விளைவு:

அதிகமாக சோறு, பருப்பு, காய்கறி, பொரியல் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும்போது, உடலில் இன்சுலின் அதிகமாக சுரக்கிறது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை தாழ்த்துவதால், உடல் தானாகவே இனிப்பு தேடுகிறது.

3. மனநிலையும் பழக்கவழக்கமும்:

குழந்தை பருவத்திலிருந்து, விருந்து அல்லது சிறப்பு உணவுகளுக்கு பிறகு இனிப்பு பரிமாறப்படுவது வழக்கமாக உள்ளது. இது ஒரு உளவியல் (Psychological) பழக்கமாகவும் மாறிவிடும்.

4. டோபமைன்(Dopamine) ஹார்மோன் சுரப்பு:

இனிப்பான உணவுகள் டோபமைன் என்ற 'சந்தோஷ' ஹார்மோனை தூண்டும். கல்யாண விருந்து போல இனிமையான சூழலில், உடல் இன்னும் அதிக சந்தோஷ உணர்வைப் பெற, இனிப்பு உணவுகளை தேடலாம்.

5. ஜீரண சக்தி (Digestive Stimulation):

சில இனிப்பு உணவுகள் (பாயசம், மிட்டாய்) கொஞ்சம் கொழுப்பு (fat) நிறைந்திருக்கும். உணவுகளை உடம்பு எளிதாக ஜீரணிக்க உதவலாம் என்பதால், உடல் தானாகவே அவற்றை தேடுகிறது.

6. குளிர்ந்த உணவுகளின் (Cold Desserts) தாக்கம்:

அதிக காரசார உணவுக்கு பிறகு, நாக்கில் ஒரு சூடான உணர்வு இருக்கும். ஐஸ் கிரீம் போன்ற குளிர்ந்த இனிப்புகள் நாக்கை இயல்பாக குளிர்ச்சியாக்கி, ஒருவித திருப்தி தரும்.

ஆகவே, இவை எல்லாம் சேர்ந்து கல்யாண சாப்பாட்டிற்கு பிறகு இனிப்பு உணவுகளை தேடுமாறு உடலை தூண்டுகின்றன!

ஜெர்மனியின் கொலோனில் உள்ள வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்கான மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் (Max Planck institute for Metabolic Research in Cologne Germany) நடத்திய ஆய்வில், நரம்பு செல்கள் இரண்டு விதமான உணர்வுகளை வகிக்கின்றன என்று கண்டறியப்பட்டது.

எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோது அவைகளின் வயிறு முழுவதுமாக நிரம்பியபோதும் அவை தொடர்ந்து சர்க்கரையை தேடி உட்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மூளை ஸ்கேன்கள், இனிப்பு உணவு உறிஞ்சப்பட்டவுடன் ஒரு குறிப்பிட்ட குழு நரம்பு செல்கள் சுறுசுறுப்பாக இருக்கும் என்று தெரியவந்தது.

மூளை ஸ்கேன் செய்யும் பகுதி மனிதர்களுக்கும் இனிப்பை தேடி வினைபுரிகிறது என்று தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் உடலுக்கு நீர்ச் சத்து குறையாமல் பாதுகாக்கும் 9 காய்கறி/பழங்கள்!
இனிப்பு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com