அதிகம் சிரிக்கும் போது ஏன் வயிறு வலிக்கிறது?

laughter
laughter
Published on

அடிக்கடி சிரிப்பது ஆரோக்கியமான ஒன்று தான். சில நேரங்களில் வாழ்வில் நடைபெறும் ஒரு நகைச்சுவை சம்பவமோ திரையில் தோன்றும் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை காட்சிகளோ நம்மை வெடித்து சிரிக்க வைக்கும். அந்த நேரத்தில் நம்மால் சிரிப்பை கட்டுப் படுத்த முடியாது. சிலர் விழுந்து விழுந்து சிரிப்பார்கள், சிலர் சிரிக்கும் போது உடல் எல்லாம் நாட்டியமாடும், இரு கைகளை உதறிக் கொண்டே சிரிப்பவர்கள் ஒரு விதம், சிலர் பக்கத்தில் இருப்பவர்களை அடித்து சிரிப்பார்கள், இது போன்று அடித்து சிரிப்பது சில நேரங்களில் கலவரத்தை உண்டு பண்ணலாம். இந்த அளவுக்கு ஒருவர் சிரிக்கும் போது அவருக்கு வயிறு வலிக்க ஆரம்பித்து விடும். சிலருக்கு கண்களில் கண்ணீரும் வரும்.

நீங்கள் சிரிக்கும்போது, ​​​​உங்கள் கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றியுள்ள தசைகள் சுருங்கி, பலவிதமான வேடிக்கையான வெளிப்பாடுகளுடன் உங்கள் முகத்தை உயிர்ப்பிக்கும். அதற்கு உச்சமாக, சிரிப்பு உங்களை விசித்திரமான ஒலிகளை வெளியிடுகிறது. சில நேரம் நாய் குட்டி கத்தும் சத்தமோ, கழுதைப்புலியின் சத்தமோ உங்கள் வாயிலிருந்து வரலாம்.

பலத்த சிரிப்பு சிறிது மூச்சுத் வாங்குதலை உண்டாக்கும். அப்போது உங்களுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கும். வயிறு இறுக்கமாகி கல் போல தோன்றலாம். அதோடு அந்த சிரிப்புக் காட்சி நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து தொடரலாம். இடைவெளி விட்டு மீண்டும் சிரிக்கலாம். இதனால் உங்கள் நரம்பு புத்துணர்ச்சி பெறும், நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து சீராகும். அடிக்கடி சிரிப்பது இதயத்திற்கு நல்லது. மனம் இறுக்கமாக இருந்தால் சிரிக்க முடியாது. அடிக்கடி சிரிப்பது இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

நாம் அதிகமாக சிரிக்கும்போது, தீவிரமாக மூச்சை வெளியேற்றுகிறோம். வெளியேற்றப்படும் காற்று மூச்சுக்குழாய் வழியாக வெளியேறுகிறது, அது வெளியேறும்போது குரல் பெட்டி அல்லது குரல்வளையில் அழுத்தத்தை செலுத்துகிறது. இது, குரல் நாண்களை அதிர்வுறச் செய்து, சிரிப்பின் சிறப்பியல்பு 'ஹா ஹா' ஒலிகளை உருவாக்குகிறது. வாயு வெளியேற்றத்தின் தீவிரம் தண்டு பகுதியில் தசை சுருக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிரிப்பு, சிரிப்பு, சிரிப்பு... அதுவே சிறப்பு சிறப்பு சிறப்பு! கொஞ்சம் சிரிங்க பாஸ்!
laughter

நீங்கள் சிரிக்கும்போது, ​​வயிற்று தசைகள் சுருங்குகின்றன, இது நுரையீரலின் அளவைக் குறைக்கிறது. இந்த துளி நுரையீரலைச் சுற்றியுள்ள அழுத்தத்தை உயர்த்துகிறது, இதன் விளைவாக வெளியேற்ற வெளியீடு அதிகரிக்கிறது. சிரிப்பு ஒரு குறிப்பிடத்தக்க ஆற்றல்மிக்க மற்றும் கட்டுப்படுத்த முடியாத செயலாக உள்ளது. அதிகமான சிரிப்பில் இருக்கும் போது அமைதியாக இருக்க முடியாது உடல் இயக்கங்கள் குனிந்து நிமிர்ந்து, கால்களை மேலே கொண்டு சென்று இறக்கி என்னன்னவோ செய்வோம். அப்போது பொறுமையாக அந்த இடத்தை விட்டு நகரலாம். அந்நேரத்தில் உங்கள் உடன் இருப்பவரின் முகத்தை பார்த்தால் போதும் மீண்டும் நீங்கள் கடினமாக சிரிக்கத் தொடங்கி விடுவீர்கள் .

இந்த வலுக்கட்டாய வாயு வெளியேற்றங்கள் கடுமையான சிரிப்பின் போது வயிற்று தசைகளை இறுகச் செய்து ஒன்றோடு ஒன்று மோதி வலிகளை ஏற்படுத்துகிறது. சிரிப்பு யோகாவின் சிரிப்பு பயிற்சிகள் இந்த அளவுக்கு அழுத்தத்தை தராது. இந்த வயிற்று வலி சில நொடிகளில் மறைந்து விடும். மீண்டும் சிரிக்கும் போது லேசான வலி இருக்கும் ஆனாலும், இது ஆபத்தான ஒன்று அல்ல. தீவிர இதய நோயாளிகள் மட்டும் கடின சிரிப்புக்கு உள்ளாக்க வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com