பற்களுக்கு இடையே இடைவெளி ஏன்? தடுப்பது எப்படி?

Gap in teeth
Gap in teeth

பற்களில் இடைவெளி விழுந்துவிட்டாலே போதும் பலருக்கும் தாழ்வு மனப்பான்மையே வந்துவிடும்! காரணம் பற்கள் தான் நம் அழகை பிரதிபலிக்கும் முதன்மையான ஒன்று. பற்களில் இடைவெளி உண்டாக்குவதை diastemas என்பர். அது எப்படி வருகிறது? எவ்வாறு தடுக்கலாம்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. (டயஸ்டெமாஸ்)diastemas காரணங்கள்:

பல் மற்றும் தாடையின் அளவு:

  • ஒருவரின் தாடை எலும்பின் அளவோடு ஒப்பிடும்போது அவரது பற்கள் மிகவும் சிறியதாக இருந்தால், பற்களுக்கு இடையில் இடைவெளிகள் உருவாகலாம். இது மரபணு காரணமாக ஏற்படலாம். காரணமாக ஏற்படலாம். அதனால்தான் டயஸ்டெமாஸ்(diastemas) என்ற நிலை குடும்பங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

காணாமல் போன அல்லது குறைவான பற்கள்:

  • சில பற்கள் காணாமல் போனால் அல்லது மற்றவற்றை விட சிறியதாக இருந்தால், டயாஸ்டீமா(diastema) உருவாகலாம்.

  • பெரும்பாலும், இது மேல் பக்கவாட்டு (lateral incisors) அதாவது மேலே உள்ள இரண்டு பெரிய பற்களின் இருபுறங்களில் உள்ள பற்களின் இடையில் நிகழ்கிறது.

பெரிதாக்கப்பட்ட லேபியல் ஃப்ரெனம்(Oversized Labial Frenum):

  • லேபியல் ஃப்ரெனம்(Labial Frenum) என்பது மேல் உதட்டின் உட்புறத்திலிருந்து மேலே உள்ள பற்களின் ஈறு வரை நீண்டிருக்கும் திசு ஆகும். இந்த திசு அதிகமாக இருந்தால் அது, இந்த பற்களுக்கு இடையில் இடைவெளியை ஏற்படுத்தும்.

ஈறு நோய்:

  • ஈறு நோய் ஏற்பட்டால் பல் இடம்பெயர்வு மற்றும் இடைவெளிகளுக்கு வழிவகுக்கும். இதனால் உருவாகும் வீக்கம் பற்களுடன் சேர்ந்து வரும் எலும்பை சேதப்படுத்தி, இறுதியில் இடைவெளியை ஏற்படுத்திவிடும்.

தவறான விழுங்கும் முறையால் வரும் பாதிப்பு:

  • விழுங்கும் போது நாக்கு வாயின் மேற்பரப்பை அழுத்தினால், அது இயல்பானது. ஆனால் அப்படி இல்லாமல், நாக்கு முன் பற்களுக்கு எதிராகத் தள்ளினால், அது காலப்போக்கில் ஒரு இடைவெளியை உருவாக்கலாம்.

பழக்கவழக்கங்கள்:

கட்டைவிரல் உறிஞ்சுதல், உதடுகளை உறிஞ்சுதல், நாக்கை அழுத்துதல் மற்றும் இதே போன்ற பழக்கங்கள் முன் பற்களில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதனால் இடைவெளி அதிகமாகலாம்.

2. பல் இடைவெளிகளுக்கான சிகிச்சை முறைகள்:

பல் பிணைப்பு(Dental Bonding):

  • சிறிய இடைவெளிகளுக்கு (5 மில்லிமீட்டருக்கும் குறைவான) பல் பிணைப்பு விரைவான மற்றும் செலவு குறைந்த சிகிச்சையாகும். இடைவெளியை மூடுவதற்கு ஒரு கலப்பு பொருள்(composite material) பயன்படுத்தப்படுகிறது. இது நிரந்தரமானது அல்ல, காலப்போக்கில் கரைந்துவிடும்.

வெனியர்ஸ்(Veneers):

  • உங்களுக்கு நிறமாற்றம், சில்லுகள் அல்லது பெரிய இடைவெளிகள் இருந்தால், வெனீர் உங்கள் பற்களுக்கென்றே தகுந்த அளவில் இருக்கும் கவர்கள். அவை நல்ல மாற்றத்தை கொடுக்கும். மேலும், இவை கறை-எதிர்ப்புத் திறன் கொண்டவை.

பிரேஸ்கள் அல்லது சீரமைப்பிகள்(Braces or Aligners):

மிகவும் குறிப்பிடத்தக்க இடைவெளிகளுக்கு, இந்த வகை சிகிச்சைகள் (பிரேஸ்கள் அல்லது சீரமைப்பிகள்) மூலம் படிப்படியாக பற்களை சரியான சீரமைப்புக்கு கொண்டு வர முடியும்.

அறுவை சிகிச்சை:

  • பெரிய இடைவெளிகளை மூடுவதற்கு சிறந்த மருத்துவர்களின் ஆலோசனை படி, வாய்வழி அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
தனிமை எனும் உலகம்… இதைப் புரிந்துகொள்வது நலம்!
Gap in teeth

3. பல் இடைவெளிகளைத் எவ்வாறு தடுக்கலாம்:

நல்ல வாய்வழி சுகாதாரம்:

  • ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் உங்கள் பற்களை துலக்குதல் மற்றும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

பல் மருத்துவரை சந்திக்கலாம்:

  • வழக்கமான சோதனைகள் மூலம் வரக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க முடியும்.

குழந்தைகளின் தொடக்க பல் வளர்ச்சியைக் கண்காணித்தல்:

  • குழந்தைகளுக்கு முதன்மைப் பற்களிலிருந்து நிரந்தரப் பற்களுக்கு மாறும் போது ஏற்படும் டயஸ்டெமாக்கள்(diastemas) தற்காலிகமானவை. பொதுவாக அவை தானாகவே மூடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com