ஈ சத்து எதற்கு அவசியம்?

Vitamin E
Vitamin E
Published on

வைட்டமின் ஈ சத்து சருமம் மற்றும் திசுக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இது மிகவும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல் பட்டு ஃப்ரீ ராடிகல்களிடமிருந்து பாதுகாக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் சருமத்தில் தெரியும். மிகவும் வறண்ட சருமம், ஹைபர்பிக்மெண்டேஸன் மற்றும் புண்கள் ஆறுவதில் வெகுகாலம் ஆவது போன்றவை ஏற்படும். சருமத்தில் ஈரத்தன்மையற்று அரிப்பு ஏற்படும்.

வைட்டமின் ஈ சத்தின் பலன்கள்:

இந்த சத்து சருமத்தில் ஈரத்தன்மை அளிக்கிறது. எக்சிமாவை தடுக்கிறது.

சுருக்கங்கள் கோடுகளைத் தடுத்து வயதான தோற்றத்தைக் தடுக்கிறது.

கொலாஜனை அதிகரிக்கச் செய்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
முட்டைப் பிரியரே... இது தெரியாம முட்டை சாப்பிடாதீங்க!
Vitamin E

ஹைபர் பிக்மெண்டேஷன் மற்றும் கருப்பு திட்டுகளை தடுக்கிறது.

சருமத்தின் அழற்சியைத் தடுத்து பாதுகாக்கிறது.

சரும சிவத்தல், வீக்கம் மற்றும் பல சரும பிரச்னைகளை தீர்க்கிறது.

சருமத்தின் நீரேற்றத்தை சமச்சீராக வைத்து ஆரோக்கியமாக வைப்பதால் முதுமை வராமல் தடுக்கிறது.

ஈ சத்து கிடைக்க:

பாதாம் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்றவற்றில் அதிக வைட்டமின் ஈ சத்து உள்ளது.

இதையும் படியுங்கள்:
சைனோபோபியா (Cynophobia) - இதுவும் ஒரு வகை பயமே! எதை பற்றியது?
Vitamin E

சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்களில் அதிக ஈ சத்து உள்ளது. குறிப்பாக எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் இயற்கையாகவே அதிக வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளது.

பழங்களில் அவகேடோ மற்றும் மாம்பழங்களில் ஈ சத்து உள்ளது. அது மட்டுமல்லாமல் நார்சத்து மாறும் ஊட்டச் சத்துக்களும் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com