வாழைப்பூவை ஏன் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்?

Why should banana flower be included in the diet?
Why should banana flower be included in the diet?

வாழைப்பூ சாப்பிட துவர்ப்பாக இருக்கும் என்பதனாலேயே பலர் அதைத் தவிர்ப்பார்கள். சிலர் அதன் துவர்ப்பு சுவையை நீக்குவதற்கு பலமுறை தண்ணீரில் அலசி கசக்கிப் பிழிந்து எடுத்து விடுவார்கள். ஆனால், நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்று.

பல மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை ஏன் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும்? என இந்தப் பதிவு மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

வாழைப்பூவை வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து இரத்தம் வேகமாகப் பயணிக்க உதவும். இது இரத்த நாளங்களில் பதிந்துள்ள கொழுப்புகளை நீக்குவதால், இரத்தம் அதிகப்படியான ஆக்ஸிஜனை பற்றிக்கொண்டு தேவையான இரும்புச்சத்தை கிரகித்துக்கொள்ள உதவும். இதனால் இரத்த சோகை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

வாழைப்பூவில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அலர்ஜி பிரச்னையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து வதக்கி எரிச்சல் உள்ள பகுதிகளில் தடவினால் விரைவில் குணமாகும். மேலும், வாழைப்பூவை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் உடல் பலம் பெறும்.

வாழைப்பூவில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இது கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகும். இதனால் கருவிழி, விழிப் படலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்பட்டு, கண்புரை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளை நிவர்த்தி செய்வதில் வாழைப்பூவின் பங்கு அதிகம். மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளை வாழைப்பூ சாப்பிடுவதால் தவிர்க்க முடியும்.

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைப்பூ சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பதால், மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். அதேபோல, வாழைப்பூ மலச்சிக்கலையும் போக்குகிறது. பேதி பிரச்னையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூ சாப்பிட்டால் விரைவில் அது கட்டுப்படும்.

இதையும் படியுங்கள்:
பாகற்காயின் மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும்!
Why should banana flower be included in the diet?

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்க்கும்போது அது அல்சரை குணமாக்கும் என்கின்றனர். செரிமானத்தை சிறப்பாக மாற்றி வாய் துர்நாற்றம், வாய்ப்புண் போன்றவற்றை நீக்கும் ஆற்றலும் வாழைப்பூவுக்கு உண்டு.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தத்தில் கலந்துள்ள அதிக சர்க்கரையை வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்பு உதவுகிறது. இதை சாப்பிடுவதால் கணையம் வலிமை பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்கும்.

இப்படிப் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் வாழைப்பூவை கட்டாயம் ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் இதை தவிர்க்கக் கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com