அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு உடல் எடை குறைவதில்லை.. ஏன் தெரியுமா?

Why Some people do not lose weight even if they exercise a lot?
Why Some people do not lose weight even if they exercise a lot?

இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறையில் பலருக்கு உடற்பருமன் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. இதிலிருந்து விடுபடுவதற்காக பலர் ஜிம்முக்கு சென்று மணிக் கணக்கில் உடற்பயிற்சி செய்கின்றனர். ஆனால் பல ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்தாலும், அவர்கள் விரும்பும் உடல் அமைப்பை அவர்களால் பெற முடிவதில்லை. இது ஏன் என எப்போதாவது யோசித்ததுண்டா? 

உடல் எடையைக் குறைப்பதற்கு ஜிம்முக்கு சென்று அதிகப்படியான உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது. முறையான உணவுக் கட்டுப்பாடு அவசியம். உணவுக் கட்டுப்பாடு இல்லையெனில் நீங்கள் ஒருபோதும் உடல் எடையைக் குறைக்க முடியாது. ஒரு நாளைக்கு 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, அதிக கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறைப்பது கடினம். 

மேலும், இன்றைய காலகட்டத்தில் பலருக்கு மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் உடலில் கார்ட்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரந்து, அதிக பசியைத் தூண்டுகிறது. இந்த பசியை போக்குவதற்காக பலர் அதிக கலோரி மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்ளுவதால் உடல் எடை மேலும் அதிகரிக்கிறது. 

உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிப்பது, தண்ணீர் குடிப்பதாகும். ஆனால் இதில் பலர் கவனம் செலுத்தாமல் தங்களை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதில்லை. தினசரி சரியான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும். அது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
கோதுமையில் இத்தனை நற்குணங்களா? தெரியாம போச்சே!
Why Some people do not lose weight even if they exercise a lot?

இது தவிர முறையாக தூங்காமல் இருப்பதும் உடற்பருமன் பாதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. சரியாக தூங்காமல் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்தாலும் வொர்க் அவுட் செய்ததற்கான பலன் கிடைக்காது. அதேபோல ஒர்க் அவுட்டை தவறாக செய்தாலும் உடல் எடையைக் குறைக்க முடியாது. நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பல மணி நேரம் வேலை செய்யும் நபராக இருந்தால், உடற்பயிற்சியின் சாதக விளைவை உணர்வது கடினம். 

எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, முறையான உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டினால் மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடியும் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com