இரவில் வைஃபை ரூட்டரை அணைக்காமல் தூங்குறீங்களா? போச்சு..! இனி இந்த தப்பு செய்யாதீங்க?

wifi router
wifi router
Published on


இன்றைய டிஜிட்டல் உலகில் இணையம் என்பது தினசரி தேவைகளில் முக்கியமான ஒன்று. ஸ்மார்ட்போன், லேப்டாப், டிவி போன்ற பல சாதனங்களை ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்க வைஃபை ரூட்டர் பெருமளவில் உதவுகிறது. பணி இடங்களில் மட்டுமே இருந்த நிலை மாறி தற்போது பெரும்பாலான வீடுகளில் அலுவலகப் பணிகளுக்கும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ரசிப்பதற்கும் வைஃபையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இத்தகைய சூழலில், இரவில் வைஃபை ரூட்டரை ஆன் நிலையில் வைத்திருப்பது சரியா? அது நம் உடல், நரம்பியல் அமைப்பு, மூளை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விகள் பலரிடமும் எழுகின்றன. அந்த சந்தேகங்களுக்கான விடையை இந்த பதிவில் வாசித்து தெரிந்து கொள்வோம்.

வைஃபை என்றால் என்ன?

வைஃபை என்பது கம்பிகள் இல்லாமல் மின்னணு சாதனங்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். சிலர் “Wireless Fidelity” என்பதே அதன் விரிவாக்கம் என்று கூறினாலும், உண்மையில் அதற்கு எந்த ஒரு விரிவாக்கமும் கிடையாது. எளிமையாகச் சொன்னால், இது கம்பிகள் இன்றி தகவல்களை அனுப்பி, பெற உதவும் ஒரு முறையாக பயன்படுகிறது.

மூளை தூண்டுதல்கள் என்றால்?

மனித மூளை செயல்படுவதற்கு மின்சார சிக்னல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் சிந்திப்பது, உணர்வுகளை வெளிப்படுத்துவது, உடலை இயக்குவது ஆகியவை அனைத்தும் இந்த சிக்னல்களின் மூலம் தான் நடக்கின்றன. அதேபோல், வைஃபை மற்றும் மொபைல் போன்களும் மின்காந்த அலைகளை பயன்படுத்துகின்றன. எனவே சிலர் இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்துமா என சந்தேகப்படுகிறார்கள். ஆனாலும், இதற்கான தெளிவான மருத்துவ ஆதாரங்கள் இதுவரை இல்லை.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! இரவு உணவுக்குப் பின் இதை எல்லாம் செய்யாமல் படுத்தால்...? அவ்வளவுதான்!
wifi router

இரவில் ரூட்டரை அணைக்க வேண்டுமா?

இரவு நேரம் என்பது உடலும் மூளையும் முழுமையாக ஓய்வு எடுக்கும் நேரம். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த சில நிபுணர்கள் ரூட்டரை படுக்கை அறையில் வைக்காமல் இருக்கவும், தூங்கும் போது அணைத்து விடவும் பரிந்துரைக்கிறார்கள். அதேபோல், மொபைல் போனையும் படுக்கை அருகில் வைக்காமல் சிறிது தூரத்தில் வைப்பது நல்லது.

வைஃபை ரூட்டரை தொடர்ந்து ஆன் நிலையில் வைத்திருப்பதால் உடலுக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கும் என்று உறுதிப்படுத்தும் ஆய்வுகள் இதுவரை இல்லை. ஆனாலும், எந்தவொரு அலைகளின் தாக்கம் நீண்ட காலத்திற்கு ஏற்படும் போது விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே பாதுகாப்புக்காக இரவில் தூங்கும் போது ரூட்டரை அணைத்து விடுவது, மொபைலை தூரத்தில் வைப்பது போன்ற எளிய முன்னெச்சரிக்கைகள் உடல் நலத்திற்கும் ஆரோக்கியமான தூக்கத்திற்கும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com