எச்சரிக்கை! இரவு உணவுக்குப் பின் இதை எல்லாம் செய்யாமல் படுத்தால்...? அவ்வளவுதான்!

Foods to avoid at night
Foods to avoid at night
Published on

ஓவர் வெயிட்டா? எளிதாக எடையைக் குறைக்க இதோ ஒரு சூப்பர் ஸ்நாக்! நம் அன்றாட வாழ்வின் இயக்க செயல்பாடுகளுக்கு ஏதுவாக உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆற்றலையும் வழங்கக் கூடியது தான் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு. இன்றைய நவீன உலகத்தில் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உண்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் பல்வேறு உடல் உபாதைகள் சிறுவயது முதலே ஏற்படுகின்றன. மாதத்திற்கு ஒருமுறை வெளியில் சாப்பிடும் பழக்கம் மாறி இப்போது நினைத்த நேரத்துக்கெல்லாம் சாப்பிடுகிறோம். இதன் விளைவாக இளம் வயதிலேயே சர்க்கரை நோய், கல்லீரல் முதலான வயிறு சம்மந்தப்பட்ட நோய்களுக்கு ஆளாகிறோம். இதற்கு முதன்மை காரணமாக விளங்குவது நம்முடைய இரவு உணவு பழக்க வழக்கங்களே.

இன்று பலரும், இரவு தூக்கம் முதல் காலை வரையிலான இடைவெளியை ஈடுசெய்யவே இரவு உணவு என்று கருதுகின்றனர். ஆனால், நாம் உணவு உட்கொள்ளாத போதும் உடலை இயக்கத் தேவையான ஆற்றலை உடலே தகவமைத்துக் கொள்கிறது.

மின்விளக்குகள் கண்டுபிடிக்காத வரையில் இரவு உணவு உண்ணும் வழக்கமே இல்லை. சூரியன் மறைவதற்கு முன்பாகவே உண்டு வந்துள்ளனர். இன்று நாம் செய்யும் வேலை மற்றும் வாழ்க்கை முறைக்கு இது சரிபட்டு வராது என்றாலும், இரவில் தாமதமாக உண்பதையே சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறான பழக்கத்திற்கு நம் வாழ்க்கைமுறையும் காரணமாக இருப்பதால், தற்காலத்திற்கு ஏற்ப எவ்வாறு ஆரோக்கியமான முறையில் இரவு உணவினைக் கொள்வது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
ஓவர் வெயிட்டா? எளிதாக எடையைக் குறைக்க இதோ ஒரு சூப்பர் ஸ்நாக்!
Foods to avoid at night

நாம் செய்யவேண்டியவை:

  • இரவு உணவினை அதிகபட்சம் 7 மணிக்குள் முடித்துக் கொள்ளவேண்டும். முடியாத பட்சத்தில் சாப்பிட்ட பின், ஒரு 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது அவசியம்.

  • இரவில் தாமதமாய் சாப்பிடுவதால் செரிமான பிரச்னை மற்றும் தூக்கமின்மை ஏற்படுகிறது. எனவே, நேரம் கழித்து இரவு நேரங்களில் சாப்பிடும் போது எளிதில் செரிமாணமாகக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

  • எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

  • ஒவ்வாமை தரும் கீரை, தயிர் போன்ற உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

  • மாவுச்சத்து மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து புரதம், காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

  • செரிமானத்திற்கு உதவும் என்று பலரும் காற்று அடைத்த குளிர்பானங்களை இரவு நேரங்களில் எடுத்துக்கொள்கின்றனர். இது மிகவும் தவறான ஒரு செயல் ஆகும். நாம் இரவு நேரங்களில் சாப்பிடும் மற்ற உணவுகளுடன் இது கலந்து உணவு விஷமாதல் ஏற்பட்டு, மேலும் உடல் உபாதைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக நாம் சுடுநீர் அல்லது சீரகம் கலந்த தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.   

  • சாப்பிட்டு முடித்தவுடன் படுக்கவோ, சாய்ந்து அமரவோ கூடாது. நடக்கவே இல்லை என்றாலும் சிறிதுநேரம் நேராக நிமிர்ந்து உட்காருவது அவசியம். 

  • சாப்பிட்ட உடனேயே தூங்குவதன் மூலம் நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்றவை ஏற்படக்கூடும்.

நம் முன்னோர்கள் 'உணவே மருந்து' எனும் கோட்பாட்டுடன் உணவுகளை உட்கொண்டு வந்தனர். ஆனால் இன்று நாமோ மருந்துகளையே உணவாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்றைய நவீன சூழலில் சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் இரத்தகொதிப்பு முதலான பெரும் வியாதிகளும் இளம் வயதினருக்கே இயல்பாக வருவதற்கு முக்கிய காரணமாய் அமைவது நம்முடைய உணவு பழக்கமும் வாழ்க்கைமுறையுமே.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன 20 ரகசியங்கள்... இவை தெரிந்தால் மருத்துவரையே மறந்துவிடலாம்!
Foods to avoid at night

வாழும் நாட்களில் நலமுடனும், நல் ஆரோக்கியத்துடனும் வாழ நம் உணவுமுறையில் கவனமுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது.

இயற்கையின் நன்கொடையாக விளங்கும் காய்கறி, பழங்கள், தானியங்கள் மற்றும் இன்னும் பிற இயற்கை உணவுகளைத் தவிர்த்து துரித உணவுகளை உண்பதன் விளைவே இவ்வாறான உடல் நல கோளாறுகளுக்கு காரணமாகிறது. எனவே, நம் உடலுக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளுடன் உணவினை உட்கொள்வதும், உடல் இயக்கங்களை மேற்கொள்வதும் நமக்கு நல்ல பலன்களை அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com