

சுவாசிக்கும் காற்றை உடலின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப மாற்றி, நுரையீரலுக்கு அனுப்பும் பணியை செய்வதுடன், மணத்தை நுகரவும் உதவியாய் இருக்கிறது.
குளிர்காலத்தில் (Winter season) பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் நோய்கள் உண்டாகின்றன. இவை முக்கியமாக சுவாச மண்டலத்தை தாக்குகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து நோய்த் தொற்று ஏற்படுகிறது. குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் போது சளி, மூக்கடைப்பு, தும்மல் (Nose problems) போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் வாய் வழியே சுவாசிக்க நேரிடும்.
நுரையீரல் தனக்கே உரிய எதிர்ப்பு சக்தி மூலம் கிருமிகளை எதிர்த்து போராடும். சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூச்சுக்குழல் அழற்சி சளி, இருமலை உண்டாக்கி தொந்தரவுகளை தரும்.
நோயுள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி சூடான வெந்நீரை தர வேண்டும். ஆவி பிடிக்க மூச்சு விட எளிதாக இருக்கும். மூக்கின் அருகில் இருக்கும் அறைகளில் சளி ஏற்பட்டு மூக்கடைப்பு ஏற்படுவதே சைனஸ் எனப்படுகிறது.
மூக்கில் உள்ள சளியால் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது தலைவலி, மூக்கில் சீழ் வடிதல், காய்ச்சல், காதுவலி ஏற்படும். லேசர் கருவி மூலம் என்டோஸ்கோபிக் சிகிச்சை அளிக்கலாம்.
மூக்கில் சதை வளர்ந்து, மூக்கினுள் உள்ள ரத்தக் குழாய் உடைதல், சைனஸ் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ரத்தம் வடியலாம். அதிக வேலை பளு, மூக்கில் காயம், வேகமாக மூக்கை சிந்துதல் போன்ற காரணங்களால் மூக்கில் ரத்தம் வரலாம்.
மூக்கில் ரத்தம் வடிந்தால், தலையை சற்றே முன் பக்கமாக சாய்த்துக் கொள்ள வேண்டும். இதனால் ரத்தம் தொண்டைக்குள் செல்லாமல் தடுக்கலாம். மூக்கை பிடித்தபடி வாய்வழியாக சில மணித் துளிகள் சுவாசிக்க வேண்டும். ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியை மூக்கின் மேல் வைக்கலாம். இது ரத்தம் வருவதை தடுக்கும். நாசியிலிருந்து ரத்தம் வடிந்தால் குறைந்தது 20 நிமிடம் இறுகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ரத்தம் வருவது தொடர்ந்தால் மூக்கில் பஞ்சு வைத்து விட்டு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் தூசுகள், காரம், கிருமிகள், போன்றவை மூக்கின் வழியாக நுரையீரலுக்குள் நுழையும்போது ஹிஸ்டமைன் என்ற தும்மல் சுரப்பியை தூண்டும். இது உடல் கழிவுகள் வெளியேறுவதற்கு உதவுவதே தவிர நோயல்ல. தும்மல் வரும்போது அடக்க வேண்டியதில்லை.
மூக்கை பாதுகாக்க சில எளிய வழி
1. முகத்தில் மாஸ்க் அணிந்து செல்லலாம்.
2. மூக்கை பலமாக சிந்தாமல் இருக்க வேண்டும்.
3. டாக்டர் பரிந்துரைக்காமல் எந்த மருந்துகளையும் மூக்கில் விடக் கூடாது. இதனால் மூக்கு அதிகமாக அடைத்து விடக்கூடும்.
4. அடிக்கடி மூக்கினுள் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
5. கர்சிப் முனையை மூக்கில் விட்டு செயற்கையாக தும்மல் வர வைக்கக் கூடாது.
6. நார்ச்சத்து நிறைந்த பழங்கள், முளைக்கட்டிய பயறுகள், கீரைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
7. சுடுதண்ணீரில் யூகலிப்டஸ் ஆயிலை ஊற்றி ஆவி பிடிக்க சைனஸ் அலர்ஜி, மூச்சு பிரச்னைகள் சரியாகும்.
8. சுவாச மண்டலத்தை வலுப்படுத்த உதவும் பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி, யோகாசன பயிற்சிகளை செய்ய நல்ல பலன் தரும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)