சர்க்கரை நோய் மற்றும் மூட்டு வலிக்குத் தீர்வு தருமா நீர்முள்ளி?

Neermulli seeds
Neermulli seeds
Published on

ன்றைய நவீன உலகத்தில் உணவுகள் ஏகப்பட்ட மாத்திரைகளால் முதலில் டேமேஜ் ஆகக்கூடிய உறுப்பு நம்முடைய கல்லீரல்தான். நாம் சாப்பிடும் உணவுகள், உணவுகளில் உள்ள கெமிக்கல்கள் ஜீரணமாகி குடல் உறுப்புக்களால் உறிஞ்சப்பட்டு அதன் கழிவுகள் எங்கே போகும் என்றால், நம் கல்லீரலுக்குத்தான். கல்லீரலில் அது சுத்திகரிக்கப்பட்டு வேஸ்ட் ஆனது பித்தப்பை வழியாக வெளியில் வந்துவிடும். மீதி உள்ளது நிறைய ரத்தக் குழாய்களுக்குப் போகிறது.

நாம் அதிகமாக மோசமான உணவுப் பதார்த்தங்களை சாப்பிட சாப்பிட நம் கல்லீரல் டேமேஜ் ஆகி சிலசமயம் அது புற்றுநோய் வரை கொண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. இவற்றை இயற்கையான சில தாவரங்கள், மூலிகைச் செடிகள் அதன் விதைகள இவற்றின் மூலம் கல்லீரலை முழுமையாகப் பாதுகாக்கலாம்.

நம் தமிழர் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்த ஒரு மூலிகைச் செடிதான் இந்த நீர்முள்ளி மூலிகைச்செடி (Neermulli). முண்டகம், துரகம், நிதிகம், காகண்டம் என்று இலக்கியங்களில் போற்றிப் பாடப்படக்கூடிய இந்த செடி ஆங்கிலத்தில் Asteracantha Iongifolia என்று அழைக்கப்படுகிறது. இது எப்படி எந்தெந்த வழிகளில் நமக்கு மருந்தாக பயன்படுகிறது என்பதை இப்பதிவில் காண்போம்.

நாம் சாதாரணமாக தலைவலி காய்ச்சலுக்கு பயன்படுத்தும் பாரசிட்டமால், டெட்ரோ குளோரைடு என்கிற இரண்டு மருந்தையும் கலந்து கொடுத்து எலிகளின் கல்லீரலை டேமேஜ் பண்ணிவிட்டு, அஸ்திரகாந்தா லாங்கிஃ போலியோ என்கிற இலைகளின் எக்ஸ்ட்ராக்டை எடுத்து கசக்கிப் பிழிந்து கொடுக்கிறபோது என்ன வருகிறது என்றால் Extract of Asteracantha llongfolio possesses he pato protective என்பதுதான் வருகிறது. இந்த detox ஆக்டிவிட்டியை இன்க்ரீஸ் செய்துவிட்டதற்கு அப்புறமும், நச்சுத்தன்மையை உண்டாக்கிவிட்ட பிறகும், அந்த கல்லீரல் பாதிப்படையாமல் பாதுகாக்கப்படுகிறது. இதுதான் அந்த நீர்முள்ளி செய்யும் வேலை.

குறுகலான ஈட்டி வடிவத்தில் இந்த செடியின் இலைகள் இருக்கும். நீலக் கருஞ்சிவப்பு நிறத்தில் இதன் மலர்கள் இருக்கும். இதன் கணுக்களில் அணில் பற்களைப் போன்ற வெள்ளை நிற முட்கள் இருக்கும். 60 சென்டிமீட்டர் வரைதான் வளரும் இச்செடி. தண்டு பகுதிகளில் சிறு சிறு முடிகள் காணப்படும். குத்துச் செடியான இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரக்கூடியது. செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூப்பூக்கும். இச்செடி நிறைய மருத்துவ குணம் வாய்ந்தது.

சித்த மருத்துவத்தில் எரிச்சல், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல், ஆன்மை பெருக்கியாகவும் இது செயல்பட்டு வருகிறது.

நீர்முள்ளியின் மற்றொரு பயன் ஆன்டி -டியுமர் -ஆக்டிவிட்டி Antitumer Activity: எலிகளுக்கு கல்லீரல் சார்ந்த புற்று நோய் ஏற்படும். அந்த எலிமெண்டிலும், எலிகளின் கல்லீரலை பாதுகாக்க கூடியதாக இருப்பதுதான் இதன் மருத்துவ நன்மை.

Rheumatoid arthritis and Asteracantha longifolio:

இந்த நீர்முள்ளியை மூட்டு வலிகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி மூட்டு வலிகளில் மருந்தாக பயன்படுத்தப்பட்டாலும் முக்கியமாக கல்லீரலில் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட (ஹெமடாலஜி பேரா மீட்டரில் ) அனிமியா போன்ற நோயிலும் கூட உபயோகமாக இருக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் மூலமாக தெரியவருகிறது.

எலும்பு மஜ்ஜை:

நம் எலும்பு மஜ்ஜையில்தான் இரத்தம் உற்பத்தி நடக்கிறது. அங்கு சைக்ளோபாஸ் புரோமைடு என்ற மருந்தை கொடுக்கும்பொழுது ரத்த அணுக்கள் உற்பத்தி ஆகாமல் தடுக்கப்படுகிறது. இப்படி தடுத்து விட்டு மறுபடியும் இந்த நீர்முள்ளி இலை கசாயத்தை ஊசியின் மூலம் ஏற்றும்போது ரத்தம் நன்றாக ஊருகிறது. இதனால் ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் இரும்பு சத்து குறைபாடுகளால் வரக்கூடிய அனிமியா என்ற நோயும் குறைகிறது.

Asteracantha longifolio seeds:

இந்த நீர்முள்ளி விதையை வைத்து ஆண்மை குறைபாட்டை நீக்கலாமா என்று சோதனை செய்தபோது அதிலும் சில பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்திருக்கிறது. இதனால் இதன் விதை ஆண்மை குறைபாட்டை நீக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் சில ஆராய்ச்சிகளில் நீர்முள்ளி விதை சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிட கூடியதாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

நீர்முள்ளி விதை:

பொதுவாக 5 கிராம் அளவில் நீர்முள்ளி விதைப்பொடியை எடுத்து அதில் அரை தேக்கரண்டி தேன் கலந்து, அதை இரவு சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் தான் நல்லது என்பது இதன் மருத்துவ நன்மை. ஆனால் இதை செய்யும் பொழுது ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியமானது.

இவ்வளவு நன்மை பயக்கும் இந்த மருத்துவ முறைகளை பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பஸ்திரீகளும் இது இவர்களுக்கு எப்படி நன்மை பயக்கும் என்பது தெரியாததால், இதை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது சேஃப்டி. அல்லது ஒரு சித்த மருத்துவரின் உதவியுடன் எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
திராட்சை விதையைத் துப்பாதீங்க! அதற்குள் இருக்கும் ஆரோக்கிய ரகசியம்...
Neermulli seeds

இரண்டு கிராம் நீர்முள்ளியின் விதைப்பொடியை எடுத்து கொதித்த அரை டம்ளர் நீரில் போட்டு கலந்தால் ஜெல்லி மாதிரி வரும். அதை அப்படியே சாப்பிட்டுவிட்டு வெந்நீரையும், பாலையும் அருந்தவேண்டும். சூடான பாலில் அல்லது வெந்நீரில் கரைத்து (கரையாது ) காலையில் டிபனுக்கு பிறகு சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com