
குளிர் காற்றின் காரணமாக குளிர்காலத்தில் சரும வறட்சி (Winter skin care juices) ஏற்படுகிறது. இதனால் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்க ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் நீர் ஏற்றதால் நிரப்புவது அவசியமாகிறது. அந்த வகையில் குளிர்காலத்தில் அவசியம் குடிக்க வேண்டிய 5 காய்கறிகள் மற்றும் பழங்களின் சாறுகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1 கப் மாதுளை விதைகள், 1 சிறிய பீட்ரூட், ஒரு ஆப்பிள் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பின்பு அதனுடன் எலுமிச்சை சாறு, புதினா இலைகளை சேர்த்து அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதால் மாதுளையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் புற ஊதா சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் பீட்ரூட் மற்றும் ஆப்பிள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான சருமத்தை பெற உதவி புரிகிறது.
2 - 4 சிவரிக்கீரை தண்டுகள், 1 சிறிய கேரட், தண்டுகள் நீக்கப்பட்ட 4-6 பெரிய பரட்டைக்கீரை இலைகள், தோல் உரித்த 1 சிறிய வெள்ளரிக்காய் மற்றும் 1துண்டு இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதனுடன் ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தேங்காய் தண்ணீர் சேர்த்து கலந்து பின்பு வடிகட்டி அருந்தவும். பரட்டை கீரையில் உள்ள ஊட்டச்சத்து நன்மைகளும், இஞ்சியில் உள்ள செரிமான பண்புகளும் சிவரிக் கீரையின் தண்டுகளும் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை நாள் முழுவதும் தாராளமாக வழங்குவதால் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்கிறது.
1 கப் அன்னாசிப் பழ துண்டுகள், 1 தோல் நீக்கிய ஆரஞ்சு, சிறிய அளவில் இஞ்சி துண்டு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொண்டு, வடிகட்டி இதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிதளவு கருப்பு மிளகு சேர்த்து பருகவும். அன்னாசி மற்றும் ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி குளிர்கால தொற்று நோய்களுக்கு எதிராக போராடுகிறது. வயதான எதிர்ப்பு பானமாக மஞ்சள் செயல்படுவதோடு, தொண்டை பிரச்சனையை மிளகுத்தூள் குணப்படுத்தி குளிர்காலத்தில் சருமத்திற்கு ஏற்ற பானமாக இருக்கிறது.
1 பச்சை ஆப்பிள், 1 தோல் நீக்கிய வெள்ளரி, 1 கப் கீரை, சில புதினா இலைகள் மற்றும் ½ எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து, நார்ச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க வடிகட்டாமல் அருந்தவும். வெள்ளரிக்காய் உடலுக்கு நீரேற்றத்தை வழங்குவதோடு, கீரையில் உள்ள வைட்டமின்கள் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துகின்றன. மேலும் பச்சை ஆப்பிள் மூளை செயல்பாடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இதில் உள்ள நார்ச்சத்துக்களும் ஆக்ஸிஜனேற்றிகளும் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
2-3 கற்றாழை சாறு, ½ எலுமிச்சை சாறு, கசப்பைக் குறைக்க 1 ஸ்பூன் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஜூஸாக அருந்தவும். கற்றாழையில் உள்ள வைட்டமின்களும் , ஆக்ஸிஜனேற்றிகளும் பளபளப்பான சருமத்தை வழங்குவதோடு சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்கின்றன. மேலும் இதில் உள்ள வைட்டமின் பி 12 நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு தொற்று நோய்களிலிருந்தும் உடலை உறுதியாக்குகிறது.
மேற்கூறிய பானங்களை குளிர்காலத்தில் அருந்த சருமம் பளபளப்பாகவும் நீரேற்றமாகவும் இருக்கிறது.