பெண்களின் சருமம் காக்கும் கஸ்தூரி மஞ்சள் மகிமை!

கஸ்தூரி மஞ்சள்
Kasturi Manchalhttps://tamil.webdunia.com

நிலத்தடியில் விளையும் கிழங்குகள் மருத்துவ குணங்கள் கொண்டவை. அதில் ஒன்று கஸ்தூரி மஞ்சள். இது சாதாரண மஞ்சளை விட சற்று மணம் அதிகமுள்ளது. சரும நோய்களை போக்கும் தன்மையை பெற்றது.

அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், கடுமையான வயிற்று வலிக்கும், கட்டிகளை உடைக்கவும், தேமல் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது . இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், நீராட உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல் மீசை முடி வளரும். இந்த முடிகளை நீக்க கஸ்தூரி மஞ்சளை பொடி செய்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும் முகத்தில் பொலிவு ஏற்படும்.

பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழக்குப் பொடி செய்து, உடல் முழுவதும் பூசி சற்று நேரம் கழித்து குளித்தால் சரும நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதில் ஐந்து குன்றிமணி அளவு தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்து கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சூடுபடுத்தி அடிபட்ட இடத்தில் தடவினாலும், துணியில் வைத்து கட்டினாலும் வீக்கமும் வலியும் குறையும்.

சாதாரண மஞ்சளுக்கு பதிலாக பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்கு பூசி வந்தால் முகத்தில் பொலிவு கூடும். பருக்கள், தேமல் வராது. இந்த இயற்கை மேக்கப் சாதனத்தை மறந்ததால்தான் இன்றைய பெண்களின் முகத்தில் முதுமை விரைவில் எட்டிப் பார்க்கிறது.

வீட்டிலேயே பூசு மஞ்சள் தயார் செய்யும் முறை: கஸ்தூரி மஞ்சள் அரை கிலோ, ஆவாரம்பூ கால் கிலோ, ரோஜா இதழ் கால் கிலோ, பூலாங்கிழங்கு 100 கிராம், வசம்பு 100 கிராம், இந்த ஐந்து பொருட்கள் எல்லாமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. அதை வாங்கிக் கொள்ளவும். காய்ந்த ஆவாரம் பூ, காய்ந்த ரோஜா இதழ்கள் எல்லாமே ரெடிமேட் ஆக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

இது காய்ந்த பொருளாகவே நீங்கள் வாங்கினாலும், இந்த ஐந்து பொருட்களையும் வாங்கி ஒரு முறை நன்றாக காயும் வெயிலில் ஒருநாள் முழுவதும் காய வைத்து விடுங்கள். பிறகு ஒரு சில்வர் டப்பாவில் போட்டு ரைஸ்மிலில் அரைத்து வந்து நன்றாக ஆறவைத்து காத்து போகாத பாட்டிலில் கொட்டி மூடி வைக்கவும்.

தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் தண்ணீர் படாமல் இருந்தால் ஒரு வருடத்திற்கு கெட்டுப்போகாது.

சோப்பு போட்டு குளித்த பிறகு இந்த குளியல் பொடியை உடல் முழுவதும் பூசி நன்றாக மசாஜ் செய்து பிறகு வெறும் தண்ணீரை ஊற்றி குளித்து விடுங்கள். தினமும் இந்த பொடியை போட்டு குளித்து வந்தால் பெண்கள் சருமம் பளபளப்பாக மாறும். உடல் துர்நாற்றம் நீங்கும். அது மட்டுமல்லாது, பெண்களின் அழகை குறைக்கும் தேவையற்ற முடி வளர்ச்சியானது குறையும். சரும தொற்று வராமல் பாதுகாப்பாக இருக்கும்., இந்த மஞ்சள் குளியல் பொடியை தேய்த்து குளித்தால், சரும தொற்று, சொறி, சிரங்கு, கொப்பளங்கள் போன்ற எந்த சருமப் பிரச்னையும் வராது.

இதையும் படியுங்கள்:
கண்களைக் கவரும் கலக்கலான கலர் கலரான 6 டீ!
கஸ்தூரி மஞ்சள்

ஒரு வயது பெண் குழந்தை முதல், இந்த குளியல் பொடியை தாராளமாக பயன்படுத்தலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. தேவை என்பவர்கள் இந்த பொடியை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு, பால், பன்னீர், தண்ணீர் எது வேண்டும் என்றாலும் ஊற்றி கலந்து ஃபேஸ் பேக்காக கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட புண்களில் இந்த எண்ணெயைத் தடவி வர, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணமாக்கும். வலி நிவாரணியாகவும் செயல்படும்.

மிளகு, கடுக்காய் தோல், வேம்பு விதை, கஸ்தூரி மஞ்சள் கலந்து செய்யப்படும், ‘பஞ்சகற்பம்’ என்ற குளியல் பொடியை பயன்படுத்தலாம். சரும பிரச்னை ஏற்படாது.கஸ்தூரி மஞ்சளுடன் பாசிப்பயறு, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, ரோஜா இதழ், செண்பகப்பூ, வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து, பொடி செய்து, தினமும் தேய்த்துக் குளித்துவந்தால் சருமம் பொலிவோடு இருக்கும். ஹாஸ்டலில் தங்கி படிக்கும் பெண்கள் கூட இந்த குளியல் பொடியை தாராளமாக பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com