அன்னாசிப் பூவில் இத்தனை அற்புதப் பலன்களா?

wonderful benefits of pineapple flower
wonderful benefits of pineapple flowerhttps://news.lankasri.com

ட்சத்திர வடிவில் இருக்கும் அன்னாசிப்பூ பிரியாணி செய்யும்போது பயன்படுத்தப்படும் பொருள். இதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளன. இது சிறந்த மணமூட்டி மட்டுமல்ல, காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை பெற்றது. மேலும், முகச்சுருக்கங்களையும் நீக்கும். மேலும், சில அன்னாசிப்பூவின் அரோக்கியப் பலன்களைப் பார்க்கலாம்.

1. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்தது அன்னாசிப்பூ. உயர் இரத்த அழுத்த பிரச்னையை சரி செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்தது.

2. அன்னாசிப்பூ தாய்ப்பாலை பெருக்கக் கூடியது.

3. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை எதிர்க்கும் சக்தி அன்னாசிப்பூவுக்கு உள்ளது.

4. உடல் பருமனாக இருப்பவர்கள் இதை அடிக்கடி எடுத்துக்கொண்டால் எடை குறையும்.

5. வாய்வுக் கோளாறுகள், அஜீரணம், செரிமானக் கோளாறு போன்றவற்றை இது சரி செய்யும்.

6. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்குவதற்கு இது பயன்படுகிறது. நூறு மில்லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஐந்தாறு அன்னாசிப் பூக்களை தட்டிப் போட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். அதை வடிகட்டி ஆற வைத்த பின்பு அந்தத் தண்ணீரில் முகம் கழுவிக்கொண்டே வந்தால் முகச் சுருக்கங்களைப் போக்கி இளமையாக வைக்கும்.

7. சளி, இருமல், காய்ச்சல் தொந்தரவு இருப்பவர்கள் இதை கஷாயம் வைத்து குடித்தால் உடனே குணமாகும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் சீரகம், மிளகு மற்றும் மூன்று அன்னாச்சிப் பூக்களை தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஆற வைத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் சளி, இருமல், காய்ச்சல் தொல்லைகள் தீரும்.

இதையும் படியுங்கள்:
பெண்கள் கண்டிப்பாக உஷாராக இருக்க வேண்டிய விஷயங்கள்!
wonderful benefits of pineapple flower

8. பெண்களுக்குத் தொந்தரவு தரும் மாதவிலக்கு நேரத்தில் வரும் வயிற்று வலியை சரிப்படுத்தி உடல் வலியைப் போக்கும்.

9. பயணத்தின்போது சிலருக்கு தலைசுற்றல், வாந்தி வரும். அவர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு அன்னாசிப்பூ, சிறிதளவு இஞ்சியையும் தட்டிப் போட்டு அந்தத் தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்ந்து குடித்தால் வாந்தி வராது. தலை சுற்றலும் சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com