வாழைப்பழம் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. தற்போது வெப்பமான காலநிலையிலும் வளரக்கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், பொட்டாசியம், வைட்டமின் B6, வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவையும் உள்ளன. வாழைப்பழத்தில் மஞ்சள் வாழைப்பழம் சிறந்ததா அல்லது சிவப்பு வாழைப்பழம் சிறந்ததா? என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது செரிமான பிரச்னையை போக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைப்பழத்தை உணவோடு எடுத்துக்கொள்ளலாம். இதில் குறைந்த கலோரிகள் உள்ளன என்பதால் உடல் எடையை அதிகரிக்காது. மேலும், ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், அதிகமாக உணவு சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.
பொட்டாசியம் இதயத்திற்கும், இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்னைகளுக்கும் மிகவும் தேவையான மினரலாகும். வாழைப்பழத்தில் தேவையான அளவு பொட்டாசியம் இருக்கிறது. எனவே, இதை உணவோடு சேர்த்துக்கொள்ளும் பொழுது இரத்த அழுத்தம், Hypertensionஐ குறைக்கிறது.
வாழைப்பழத்தை தினமும் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சிவப்பு வாழைப்பழத்தில் அதிகமாக பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது மஞ்சள் வாழைப்பழத்தை காட்டிலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக உள்ளது. செவ்வாழையில் Fructose, sucrose, glucose ஆகிய இயற்கையான சர்க்கரை இருப்பதால், உடலுக்கு உடனடியாக சக்தியை கொடுக்கிறது.
சர்க்கரை வியாதியுள்ளவர்களுக்கு செவ்வாழை ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவாகக் கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும், எளிதாக செரிக்கக்கூடியது என்பதால், சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ள சிறந்த பழமாக செவ்வாழை இருக்கிறது.
செவ்வாழையில் கரோட்டினாய்ட் பிக்மெண்ட் உள்ளது. இதனால்தான் இந்தப் பழம் சிவப்பு நிறத்தில் உள்ளது. Lutein and beta carotenoids மாலை கண்நோய், கண் சம்பந்தமான பிரச்னை ஆகியவற்றை போக்கி பார்வை நன்றாகத் தெரிய உதவுகிறது.
செவ்வாழையை பெண்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், கருவுறுதலில் பிரச்னை ஏற்படாது. இதில் Beta Carotene, Vitamin C உள்ளதால், பெண்களினுடைய இனப்பெருக்க ஹார்மோனை அதிகப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு செவ்வாழையை உணவோடு மசித்துக் கொடுக்கலாம். இது மிருதுவாக, சுலபமாக செரிக்கக்கூடியதாகவும், அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்கிறது.
எனவே, செவ்வாழையில் Beta carotene மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், நோய் எதிர்ப்புசக்தி அதிகம் கொண்டதாகவும் உள்ளது. மேலும், மஞ்சள் வாழைப்பழத்தை விட இதில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. ‘அனிமியா’ உள்ளவர்கள் தினமும் செவ்வாழையை உணவில் எடுத்துக்கொள்வது உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது.