கோடையில் சரும அரிப்புகளைத் தடுக்க 10 எளிய வழிகள்!

Rashes
Rashes
Published on

கடும்வெயிலினால் முகச் சருமம் மட்டுமல்ல உடல் முழுவதுமே அரிப்புகள் ஏற்படும். அப்போது நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. சரும பராமரிப்பு என்பது இந்த வெயில் காலங்களில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தவகையில் எதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதைப் பற்றி பார்ப்போம்.

1. சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்:

வெயில்காலங்களில் அதிக வியர்வை வரும். வெளியில் சென்று வரும்போது வியர்வையுடன் அழுக்குகள் மற்றும் பேக்ட்ரியாக்களும் சேர்ந்துத் தங்கிவிடும். ஆகையால் PH சமநிலையில் இருக்கும் சோப்களைப் பயன்படுத்தி வீட்டிற்கு வந்தவுடன் குளித்துவிட வேண்டும். தினமும் இரண்டுமுறை குளிப்பது நல்லது. அதேபோல் வியர்வை அதிகமாகும்போதெல்லாம் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. ஏற்ற உடை:

உராய்வு ஏற்படாத வகையில் பருத்தி, கைத்தறி அல்லது ஈரப்பதத்தை உறிஞ்சும் வகையிலான துணிகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. இலகுவான, சுவாசிக்கக்கூடிய துணிகளைப் பயன்படுத்துங்கள். அதேபோல் உடம்பை ஒட்டிய இறுக்கமானத் துணிகளைத் தவிர்ப்பது நல்லது.

3. அதிக நீர் குடிக்க வேண்டும்:

வெயில் காலங்களில் உடலில் நீர் சத்து அதிகம் இருப்பது அவசியம். அவ்வப்போது தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் சருமத்தைப் பராமரித்து அரிப்பு மற்றும் தடிப்புகள் வராமல் பாதுகாக்கும்.

4. மாய்ஸ்ட்ரைஸர்:

மென்மையான மற்றும் வாசனையான மாய்ஸ்ட்ரைஸரைப் பயன்படுத்தவும். குளித்துவிட்டு Non greasy மாய்ஸ்ட்ரைஸரைப் பயன்படுத்தவும். அதேபோல் Non comedogenic  என்று குறிப்பிடப்பட்ட மாய்ஸ்ட்ரைஸரைப் பயன்படுத்துவது பக்க விளைவுகளைத் தடுக்கும்.

5. பவுடர்:

முகத்தில் பயன்படுத்தும் பவுடரை குளித்தப் பிறகு உடம்பு முழுவதும் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அரிப்பு ஏற்படும் இடங்களிலாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது ஈரப்பதத்தைக் கொடுத்து உராய்வு ஏற்படாமல் தடுக்கும்.

6. சூடான நீரில் குளிப்பதைத் தடுக்கவும்:

இயற்கையான குளிர்ந்த நீரில் குளியுங்கள். ஏனெனில் சூடான நீர் சருமத்தில் உள்ள எண்ணெய்களை முற்றிலுமாக நீக்கிவிடும். இதனால் கட்டாயம் அரிப்புகள் வரும். சுடு நீர் மற்றும் கடுமையான சோப்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

7. அதிக இரசாயனம் உள்ள பொருட்களைத் தவிர்க்கவும்:

கோடை காலங்களில் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். அதாவது சோப்கள், முகத்திற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், பவுடர், மாய்ஸ்ட்ரைஸர், டோனர், க்ளென்ஸர் ஆகியவற்றில் இரசாயனம் எவ்வளவு சேர்க்கப்பட்டுள்ளது என்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.

8. சுற்றுச்சூழல்:

 நீங்கள் இருக்கும் பகுதியில் வெளி காற்றோட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். சுத்தமாக வெளி காற்றோட்டம் இல்லையென்றால் ஏசி, ஃபேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீங்கள் இருக்கும் இடத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் நீரிழப்பைத் தடுக்கும் சிறந்த உணவுகள்!
Rashes

9. அன்டி சேஃபிங் க்ரீம்கள்:

அதிகமாக அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உராய்வை குறைக்க ஆன்டி- சேஃபிங் க்ரீம்கள் அல்லது பவுடர்களைப் பயன்படுத்துங்கள். குறிப்பாக தொடை மற்றும் அக்குள் போன்றப் பகுதிகளில் பயன்படுத்துவது அவசியம்.

10. தோல் மருத்துவரை அனுகுங்கள்:

ஒருவேளை உங்கள் சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு, அது தீவிரமானது என்றால் உடனே சிறிதும் தாமதிக்காமல் தோல் மருத்துவரிடம் செல்வது நல்லது. அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளையும் மருந்துகளையும் தொடர்ச்சியாகப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com