மாகாளி கிழங்கு தரும்  மாபெரும் நன்மைகள்!

மாகாளி கிழங்கு தரும்  மாபெரும் நன்மைகள்!
Published on

மாகாளிக் கிழங்கு, மாகாணிக்கிழங்கு, பெருநன்னாரி என்ற பெயர்களில் அழைக்கப்படும். இக்கிழங்கு உண்மையில் ஒரு வேர் ஆகும்.  இது மலையில் விளைந்தால் மாகாணி அதுவே நாட்டில் விளைந்தால் நன்னாரி என்று பழமொழியே உள்ளது.

  • சரும ஒவ்வாமைக்கான மருந்தாக மாகாளிக்கிழங்கு செயல்படுகிறது.

  • சித்தமருத்துவத்தில் மாகாளி, பல தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச் சேர்க்கப் படுகிறது.

  • இதிலுள்ள சில வேதிப்பொருள்கள் மூட்டு வலியைக் குறைக்க உதவும்.

  • மாகாளிக் கிழங்கு, வேர் வகையைச் சேர்ந்தது என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ரத்தக்கட்டு, வாதம், காயம், ரத்தச்சோகை, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் சேர்க்கப்படுகிறது.

  • மாகாளியை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அந்த தண்ணீரை அரை கப் காலை, அரை கப் மாலை குடித்து வர, நீரிழிவு நோய் விலகும்.  

இதையும் படியுங்கள்:
ஆழ்ந்த உறக்கத்தின்போது நம் உடலில் நடப்பது என்ன?
மாகாளி கிழங்கு தரும்  மாபெரும் நன்மைகள்!
  • உடலுக்கு ஊட்டத்தையும் உள்ளத்துக்கு உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய இயல்பு மாகாளிக்கிழங்குக்கு உள்ளது.

  • மாகாளி கிழங்கின் இலைகளை சாப்பிட்டு வந்தால், உடலில் வியர்வை நாற்றம் விலகி விடும்.

  • மாகாளிக் கிழங்கு, நச்சுகளை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

  • மாகாளி கிழங்கை உலர வைத்து பொடித்து, ஒரு கப் பாலில் ஒரு ஸ்பூன் பொடியைக் கலந்து குடித்துவர சிறுநீர் மஞ்சளாக போவது மாறும். உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும்.

  • மாகாளிக் கிழங்கு, பசியை அதிகரிக்கும்; செரிமானப் பிரச்னைகளைச் சரிசெய்ய உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com