10 நாட்களில் 13 பேய் படங்கள்: தில்லாக பார்த்தால் ரூ. 95 ஆயிரம் பரிசு!

10 நாட்களில் 13 பேய் படங்கள்: தில்லாக பார்த்தால் ரூ. 95 ஆயிரம் பரிசு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைனான்ஸ் பஸ் நிறுவனம் ''ஹாரர் மூவி ஹார்ட் ரேட்'' என்கிற பெயரில் ஒரு ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. இதில் 10 நாட்களில் 13 திகில் படங்களை திரையிடப்படவுள்ளன. அந்த 13 படங்களையும் முழுமையாக பார்த்து முடித்த ரசிகர்களூக்கு ரூ. 95 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வுக்காக திரையிடப்படும் படங்களுக்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த திகில் திரைப்படங்களைப் படங்களிஅப் பார்க்கும்போது ரசிகர்களீன் இதயத் துடிப்பு எந்தளவு அதிகரிக்கிறது என்பதை இந்நிறூவனம் ஆராய்ச்சி செய்யுமாம். இந்த திகில் படங்களைப் பார்க்கும் போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த 13 பயங்கரமான திகில் படங்களையும் முழுதாக பார்க்கும் பார்வையாளர்களுக்கு ரூ. 95 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com