6 Jar Method 
பொருளாதாரம்

சம்பாதிக்கும் பணம் வருவதும் போவதும் தெரியவில்லையா? இந்த 6 ஜாடி முறையைப் பின்பற்றிப் பாருங்களேன்!

மணிமேகலை பெரியசாமி

பணம் வாழ்க்கையின் இன்றியமையாத தேவை. நாம் தற்சமயம் இருக்கும் பொருளாதார தரத்தில் இருந்து உயர வேண்டும் என்ற கனவோடுதான் அனைவரும் வேலைக்குச் செல்வோம். ஆனால், வேலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த சில மாதங்களுக்குப் பிறகுதான், 'சம்பாதிக்கும் பணம் எங்குதான் செல்கிறது' என்ற ஒரு கேள்வி நம் மனதில் எழும். அதோடு சேர்ந்து, எதிர்கால வாழ்வைப் பற்றிய அச்சமும் எழ ஆரம்பிக்கும். சம்பளம் வந்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது. அதை எங்கு, எப்படி செலவு செய்தோம் என்பது நினைவிலும் இல்லை. அதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுமில்லை. சேமித்து வைக்கவும் முடியவில்லை என்று புலம்புபவர்களுள் நீங்களும் ஒருவரா?

கவலை வேண்டாம். உங்களுக்காகவே ஒரு சிம்பிளான பட்ஜெட் பிளான் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். அதுதான், டி. ஹார்வ் எக்கரின் (T. Harv Eker) 6 ஜாடி பண மேலாண்மை அமைப்பு. இந்த முறை மூலம் பணத்தை சேமித்து வைப்பதோடு, அதைப் பெருக்கவும் முடியும்.

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை, ஆறு வெவ்வேறு கணக்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு கணக்கிலும் ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தை போட்டு, நிர்வகிக்கும் முறையே இந்த 6 ஜாடி பண மேலாண்மை சிஸ்டம்.

தெளிவாகச் சொல்லவேண்டுமானால், முதலில் 6 ஜாடிகளை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இங்கு ஜாடிகள் என்பது வாங்கிக் கணக்குகளைக் குறிக்கிறது. பின், நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள சதவீதத்தின் அடிப்படையில் ஆறு பாகங்களாக பிரிக்க வேண்டும்.

முதல் ஜாடியை, உணவு, உடை, வீட்டுவாடகை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். சம்பாதிக்கும் பணத்தில் 60 சதவீதத்தை இதற்காக ஒதுக்கி கொள்ள வேண்டும். அதற்கு மேல் செல்லக் கூடாது.

இரண்டாவது ஜாடியை, வீட்டுக்கடன், குழந்தைகளின் கல்விச் செலவு போன்ற நீண்ட காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்த வேண்டும்.

மூன்றாவது ஜாடியை, கார், பைக், லேப்டாப் போன்றத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நான்காவது ஜாடியை, உங்கள் பொருளாதார சுதந்திரத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது, பென்ஷன், ஓய்வூதியத் தொகை, இன்சூரன்ஸ் போன்ற எதிர்காலத் தேவைகளை சமாளிக்க உதவியாக இருக்கும் திட்டங்களுக்காகவோ, அமைப்புகளுக்காகவோ பணத்தை ஒதுக்க வேண்டும்.

இந்த மூன்று ஜாடிகளிலும், நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 10 சதவீம் ஒதுக்க வேண்டும்.

அடுத்ததாக, ஐந்தாவது ஜாடி. இதில் நன்கொடை, தானம், தர்மம் போன்று பிறருக்கு கொடுத்து உதவுவதற்காக, நாம் சம்பாதிக்கும் பணத்தில் 5 சதவீதம் ஒதுக்க வேண்டும். நாம் பிறருக்கு எவ்வளவு கொடுக்கிறமோ அந்த அளவிற்கு நமக்கு கிடைக்கும் என்பது நியதி.

கடைசியாக ஆறாவது ஜாடி. இதை Play Jar என்றும் அழைக்கலாம். இதில் போடும் பணத்தை சினிமா, சுற்றுலா, ஷாப்பிங் போன்று தனக்கான தனிப்பட்ட சந்தோஷத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். சம்பாதிக்கும் பணத்தில் 5 சதவீதத் தொகையை உங்களது பொழுதுபோக்கிற்காக செலவு செய்யலாம். 5 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது.

இதுபோன்ற 'பண' நிர்வாகம், 'நேர' நிர்வாகம், 'வீட்டு' நிர்வாகத்திற்கான நல்ல யோசனைகளை நீங்களும் பகிரலாமே! onlines@kalkiweekly.com

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

SCROLL FOR NEXT