Save Money 
பொருளாதாரம்

மாதச் சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு: பணத்தை சேமிக்கும் 10 வழிகள் இதோ!

ரா.வ.பாலகிருஷ்ணன்

மாதச் சம்பளம் வாங்குவோர் பலரும் செலவுகளை எப்படித் திட்டமிடுவது மற்றும் எப்படி சேமிப்பது குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களுக்காகவே பணத்தை சரியான முறையில் செலவிடவும், சேமிக்கவும் உதவும் சிறந்த 10 வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. இந்தியாவில் உள்ள பலரும் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் தான். இவர்களில் சிலர் வீட்டுச் செலவிற்கு சரியாக பட்ஜெட் போடாமல், பணத்தை தண்ணீர் போல செலவழித்து விடுவார்கள். மாதச் சம்பளத்தை சரியான முறையில் பட்ஜெட் போட்டு செலவழித்து, சிக்கனமாக இருந்தால் எதிர்கால வாழ்க்கைக்கு அது பேருதவியாக இருக்கும்.

2. எக்காரணத்தைக் கொண்டும் கடன் வாங்காதீர்கள். கடன் வாங்கினால், மாதாமாதம் வட்டி செலுத்தியே உங்களின் பாதி சம்பளம் தீர்ந்து விடும். கடன் வாங்கும் அவசரச் சூழல் ஏற்பட்டால் தவிர, மற்ற நேரங்களில் கடன் வாங்குவது நல்லதல்ல.

3. மாதச் சம்பளத்தைச் செலவிடுவதற்கு முன்னர் வீட்டு வாடகை, மளிகை செலவு, மருத்துவ செலவு, மின்சாரக் கட்டணம் மற்றும் சில அத்தியாவசியத் தேவைகளுக்கான பணத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். செலவுக்கான இலக்கைத் தேர்வு செய்தால் வீண் செலவுகளைத் தவிர்த்து விடலாம்.

4. சேமிப்புப் பழக்கத்தை எவ்வளவு விரைவாகத் தொடங்குகிறீர்களோ அவ்வளவும் உங்களுக்கு பின்னாட்களில் நன்மை பயக்கும். மாத சம்பளத்தில் சிறு தொகையை வருங்கால சேமிப்பிற்குப் பயன்படுத்துங்கள்.

5. எதிர்பாராத நேரங்களில் தேவைப்படும் நிதித் பிரச்சினைகளை சமாளிக்க மாதந்தோறும் ஒரு தொகையை சேமித்து வையுங்கள். வேலையிழப்பு, மருத்துவம் மற்றும் விபத்து போன்ற சமயங்களில் இந்தத் தொகை உதவியாக இருக்கும்.

6. நிதி மேலாண்மைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களின் மூலதனத்தை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இது உதவும். பணத்தை எங்கு எப்படி செலவு செய்ய வேண்டும் எனவும், செலவின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

7. ஆடம்பரச் செலவுகள் எதையும் செய்யாதீர்கள். அத்தியாவசியத் தேவைக்கும், ஆடம்பரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள். சொந்த வீடு என்பது அத்தியாவசியம்; கார் வாங்குவது ஆடம்பரச் செலவு. ஆகையால், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தாலே கடனில் சிக்குவதை ஓரளவு தவிர்த்து விடலாம்.

8. மாதந்தோறும் உங்களால் முடிந்த சிறு தொகையை எளியவர்களுக்கு கொடுத்து உதவலாம். பிறருக்கு உதவுவதன் மூலம் இனம் புரியாத ஒரு மன நிம்மதி கிடைக்கும்.

9. ஓய்வு காலத்திற்காக சிறு தொகையை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு பெற்ற பிறகு, உங்களின் ஓய்வு நேரத்தை நிம்மதியாகக் கழிக்க இது உதவும். மேலும், இந்நேரத்தில் யாரையும் நம்பிடாமல் தைரியமாக வாழ முடியும்.

10. மாதந்தோறும் பட்ஜெட் முறைப்படி செலவு செய்பவர்கள், நிதி சிக்கல்களை எளிதாக தவிர்த்து விடுவார்கள். பட்ஜெட் உங்களின் நிதி மற்றும் செலவு இலக்குகளைத் தீர்மானிப்பதால், கடன் பிரச்சினை இன்றி நிம்மதியாக வாழலாம்.

மேற்கண்ட 10 வழிகளை நீங்கள் பின்பற்றினால், பணத்தைச் சிக்கனமாக செலவு செய்து சேமிக்க முடியும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT