இந்தியாவில் BMW கார் விற்பனை புதிய உச்சத்தை எட்டி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இனிவரும் நாட்களில் இந்த விற்பனை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பிரபலமான கார் நிறுவனமான BMW, இந்தியாவில் தனது வர்த்தக நடவடிக்கையை விரிவுபடுத்தி இருக்கிறது. பல்வேறு புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்து கஸ்டமர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து வழங்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் BMW கார்களின் விற்பனை இந்தியாவில் உயர்வை எட்டத் தொடங்கி இருக்கிறது.
கொரோனா காலத்தில் சுணக்கச் சூழலில் இருந்த BMW கார் விற்பனை, நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலகட்டத்தில் 10 சதவீத உயர்வை சந்தித்திருக்கிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு நடப்பாண்டின் ஒன்பது மாத காலகட்டத்தில் 9,580 கார்களை BMW கார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,988 கார்களை இந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. விற்பனையில் ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த முன்னேற்றத்துக்கு மக்களின் வருவாய் உயர்வு, இந்தக் கார் நிறுவனத்தின் தொடர் முன்னெடுப்பு ஆகியவையே முக்கியக் காரணமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விலை உயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்து வரும் BMW கார் நிறுவனம் அடைந்துள்ள இந்த முன்னேற்றம் நடப்பு ஆண்டின் வரக்கூடிய காலத்திலும் எதிரொளிக்கும். தற்போது இந்தியாவில் பண்டிகைக் காலம் நடைபெற்று வருவதால் நடப்பு காலக்கட்டத்தில் BMW கார் விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, தற்போதைய காலகட்டத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை இந்தியாவில் தொடர் வளர்ச்சியை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.