59 வயதில் நிறுவனத்தை தொடங்கி, தற்போது மிகப்பெரிய அழகு சாதன நிறுவனமாக கட்டமைத்திருக்கிறார் ஃபால்குனி நாயர் என்ற பெண்.
ஆண்களைவிட பெண் சாதனையாளர்களின் எண்ணிக்கை குறைவு. காரணம் இந்த சமூகம் ஆண்களுக்கான முக்கியத்துவத்தை அதிகம் கொண்டிருப்பதால் களத்தில் அடியெடுத்து வைக்கும் பெண்களின் எண்ணிக்கையை குறைவாக இருக்கிறது. மேலும் சாதனையாளர்களாக பெண்கள் உருவாக்குவதில் அதிகமான தடைகளும் இருக்கின்றன. இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த ஃபால்குனி நாயர் இந்தியாவின் பெண் தொழிலதிபராக உருவெடுத்ததோடு மட்டுமல்லாமல், சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.
குஜராத்தில் பிறந்த ஃபால்குனி நாயரின் தந்தை இரும்பு தொழில் உற்பத்தி ஆலை நடத்துபவர். இவர் அகமதாபாத்தில் உள்ள IIM கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றார். இவர் பேஷன் கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறிய அளவில் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தனது 50வது வயதில் பேஷன் கலை மற்றும் அழகு, ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் விற்பனை நிறுவனமாக நைகா என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் மிகவும் ஃபேமஸான பேஷன் நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது.
2012 ஆம் ஆண்டு தினசரி 60 ஆர்டர்களோடு தொடங்கப்பட்ட நைகா நிறுவனம் தற்போது இந்தியாவின் மிகப் பெரிய அழகு மற்றும் ஆரோக்கிய மற்றும் ஃபேஷன் பொருட்கள் விற்பனை நிறுவனமாக மாறி இருக்கிறது. மேலும் ஆன்லைன் வர்த்தகத்திலும் தடம்பதித்து இந்தியாவின் கிராமப் பகுதிகளிலும் அதிகமான கஸ்டமர்களை விரிவுபடுத்தி இருக்கிறது.
குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இருக்கக்கூடிய நைகா நிறுவனம், பங்குச்சந்தை வர்த்தகத்திலும் கால் பதித்து சாதனை படைத்திருக்கிறது. தற்போது 722 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்று இந்தியாவின் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனமாக உயர்ந்து இருக்கிறது. தற்போது ஃபால்குனி நாயருடைய சொத்து மதிப்பு 6.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கிறது.
50 வயதில் ஃபால்குனி நாயர் என்ற பெண் உருவாக்கிய சாதாரண நிறுவனம் இன்று இந்தியாவின் 40 நகரங்களில் 80 கிளைகளை கொண்டிருக்கிறது. மேலும் இணைய வர்த்தகத்திலும் கொடி கட்டி பறக்கிறது. இப்படி தனது கடின உழைப்பால் மிகப்பெரிய நிறுவனமாக நைகாவை மாற்றி இருக்கிறார் ஃபால்குனி நாயர்.