இந்தியாவில் கடன் வாங்கும் மக்களினுடைய எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு அதிகரித்து இருப்பதாக இந்திய நிதி மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்திய மக்கள் அதிகப்படியான விலைவாசி உயர்வு காரணமாகவும், வாங்கும் வருமானத்தில் மாற்றம் மற்றும் உயர்வு இல்லாததாலும் அதிகம் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதிலிருந்து மருத்துவ செலவிற்காக பயன்படுத்தவும் என்று அதிக அளவில் கடன் வாங்க தொடங்கி இருக்கின்றனர். இவ்வாறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட இணைய செயலிகள் வழியாகவும் அதிகம் கடன் வாங்கி வருகின்றனர்.
இந்தியாவில் தனிநபர் கடன், வாகன கடன், கல்விக் கடன், வீட்டு உபயோக பொருட்கள் என்று பல்வேறு வகையான பொருட்களுக்கான மாதாந்திர இஎம்ஐ என்று அதிகளவில் கடன் வாங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக 2022 ஆம் ஆண்டு விட 2023 ஆம் ஆண்டு தனிநபர் கடன் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக மருத்துவத்திற்காகவே அதிகம் தனிநபர் கடன் வாங்கப்பட்டிருக்கிறது.
வாகன கடன் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை வாகன கடன் வாங்கும் மக்களின் சதவீதம் சராசரியாக இருக்கிறது. கல்வி கடன் பெரும்பாலும் நகர்ப்புற பகுதிகளில் அதிகம் பயன்படுகிறது. பல்வேறு வகையான இஎம்ஐ திட்டங்கள் இந்தியா முழுவதும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
கடனை வாங்கியாவது தங்கத்தை சேமிக்க வேண்டும் என்ற மனநிலை இந்திய மக்களிடம் பெருமளவில் அதிகரித்து இருக்கிறது. இதனால் தங்கம் வாங்க கடன் வாங்குபவருடைய எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. காப்பீடுகளில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது என்று இந்திய நிதி மற்றும் தொழில் வளர்ச்சி கழகம் தெரிவித்து இருக்கிறது.