விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அசீம், விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் தகுதி பெற்று இருந்தார்கள். இதில் அசீம் முதலிடத்தையும் அவரைத் தொடர்ந்து விக்ரமன் மற்றும் சிவின் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்து இருந்தார்கள். முதல் பட்டத்தை வென்ற அசிமிற்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு சிறப்பு பரிசாக ஒருபுதிய மாருதி கார் வழங்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் இந்த சீசனுக்கான பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்த செய்தி வெளியாகி இருந்தது . அதில் விக்ரமனை துப்புரவு தொழிலாளிகள் சந்தித்து மாலை அணிவித்து அவருக்கு மகுடம் சூட்டி பாராட்டு தெரிவித்து இருந்தார்கள்.விக்ரமன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து பேசி இருக்கிறார். விக்ரமனுக்காக பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூட ஓட்டு கேட்டு பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் மனித கழிவுகளை மனிதனே அல்லும் அவலம் குறித்து நாடகம் ஒன்றை நடித்துக் காட்டி இருந்தார். அந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டது. இதனால் தான் துப்புரவு தொழிலாளிகள் பலரும் விக்கிரமனை கொண்டாடினார்கள்.
சமீபத்தில் டெல்லி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டவிக்ரமனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. அதோடு இந்தநிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், விசிக பொதுச் செயலாளாரான ரவிக்குமார் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த தகவல் வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் விக்ரமனுக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்