பேட்டைக்காளி 
சின்னத்திரை / OTT

விளையாட்டுக்கு பின் உள்ள அரசியல் : 'பேட்டைக்காளி'!

ராகவ்குமார்

வெற்றி மாறன் தயாரிப்பில் லா. ராஜ்குமார் இயக்கத்தில் ஆஹா ஒ டி டி தளத்தில் வந்துள்ள வெப் தொடர் பேட்டைக்காளி. இதன் முதல் நான்கு எபிசோட்களை பற்றி இங்கு காண்போம்.

தூங்கும் ஏரிமலையின் பெரு வெடிப்பு, வழ்வினையும் வஞ்ச பெரும் பகையும், வனமெனும் கொடுங்கூர் ஆயுதம், காளியின் அவதரிர்ப்பு என நான்கு எபிசோட்களும் நான்கு தலைப்புகளில் உருவாக்க பட்டுள்ளன. உள்ளே உள்ள கதைக்கு ஏற்றவாரு தலைப்பை வைத்துள்ளார்கள்.

முன் பகையால் ஊர் பெருநிழக்கிழாருக்கு (வேல ராமமூர்த்தி ) கலையரசன் ஊர் சார்ந்த மக்கள் தங்கள் ஊரில் உள்ள ஜல்லிக்கட்டு மாடுகளை குறிப்பாக தான் வளர்க்கும் மாட்டை பிடிக்க தடை விதிக்கிறார். இதை மீறி ராமமூர்த்தியின் மாட்டை பிடிக்கிறார் கலை. அவமானம் தாங்காத மாடு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறது. இதனால் கோபமான ராமமூர்த்தி கலையை கொலை செய்து விடுகிறார்.

கலையின் தாய் மாமா கிஷோர் ராமமூர்த்தியை தாக்குகிறார். இதனால் பார்வை பறி போகிறது. இதன் பிறகு நடக்கும் சூழ்ச்சிகளை மிக நேர்த்தியான கதையுடன் சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

கலையரசன்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உள்ள ஜாதி என்ற விஷயத்தை வெவ்வேறு ஊர் என்று மாற்றி இருக்கிறார். இது வரை ஜல்லிக்கட்டு பற்றியும் இதில் உள்ள காளை வளர்ப்பு பற்றியும் வேறு எந்த படத்திலும் சொன்னதில்லை.

கம்பீரம், சூழச்சி, கோபம் கலந்த நடிப்பை தந்துள்ளார் வேல ராமமூர்த்தி. தூடுக்கான இளைஞனுக்கு கலையரசன் பொருந்தி போகிறார். வேறுபட்ட நடிப்பை தந்துள்ளார் கிஷோர். ஒரு தாயின் அன்பை காளியின் மீது காட்டுகிறார். ஷீலா.

நாம் வீட்டில் டிவியில் ஜாலியாக பார்க்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியில் உள்ள அரசியலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது பேட்டைக்காளி.

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

ஐப்பசி அன்னாபிஷேகம் தோன்றிய வரலாறு!

உன்னால் முடியும் பெண்ணே! இந்த 5 அடிப்படை விஷயங்கள் இருந்தால் போதுமே!

SCROLL FOR NEXT