வானத்தைப்போல நடிகை ஸ்வேதா 
சின்னத்திரை / OTT

வானத்தை போல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்.. வைரலாகும் போட்டோ!

விஜி

வானத்தை போல சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் பலருக்கு திருமணம் ஆகிவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சின்னத்திரை நடிகை சங்கீதாவின் திருமணம் நடந்தது. இப்போது வானத்தை போல தொடரில் சின்ராசு தங்கை துளசி கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இந்த ஜோடிக்கு சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல தொடரில் சின்ராசின் தங்கை கதாபாத்திரமான துளசி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்வேதா கெல்ஜ். சீரியல் தொடங்கி சீரியல் ஹிட் ஆகும் வரை இவர் அந்த தொடரில் நடித்திருந்தார். சில பல காரணங்களால் வானத்தை போல தொடரிலிருந்து இவர் விலகினார். இப்போது கலைஞர் தொலைக்காட்சியின் கண்ணெதிரே தோன்றினாள் என்னும் மெகா ஹிட் சீரியலில் நடித்து வருகிறார்.

இவருக்கும் இவரது காதலர் மதுவுக்கும் நிச்சயதாரத்தம் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்வேதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT