80'ஸ் பில்டப் 
வெள்ளித்திரை

விமர்சனம் :80'ஸ் பில்டப்

ராகவ்குமார்

"டேய் நீ நிஜ திருடனா, மூஞ்சியில் மரு இருக்றதால திருடன் ஆகிட்டியா,"   "இந்த நடிப்பை எல்லாம் கமல் சாரே ஏத்துக்க மாட்டாரு " இப்படி சந்தானத்தின் பல அட்ரா சிட்டி டயலாக்கில்  காட்சிக்கு காட்சி  ரசிகர்களை சிரிக்க வைக்கும் படமாக வந்துள்ளது 80'ஸ் பில்டப்.   

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வழங்கும் இந்த  பில்டப்பை கல்யாண் இயக்கி உள்ளார். கதிரின் (சந்தானம் ) தங்கை தன் அண்ணன் கதிரிடம் ஒரு பெண்ணை காதலிக்க வைக்க முடியுமா என்று சவால் விடுகிறார். இந்த சவாலில் வெற்றி பெற கதிர் செய்யும் பில்டப்தான் இந்த 80'ஸ் பில்டப்.

பெரும்பான்மையான காட்சிகள் ஒரு சாவு வீட்டை சுற்றி அமைந்தாலும், காட்சிகளில் துளி கூட சோகம் இல்லாமல், சிரிக்க மட்டும் வைத்துள்ளார் டைரக்டர். சந்தானம் வசனங்களில் சிரிக்க வைக்கிறார். ஆனால் சந்தானத்தை விட அதிகம் நகைச்சுவையில் கலக்குவது ஆனந்த ராஜும், நரேனும்தான்.

ஆனந்த ராஜ் இதற்கு முன் பெண் வேடமிட்டு நடித்துள்ளார். இந்த படத்திலும் பெண் வேடம் தரித்து பட்டையை கிளப்பி விட்டார் என்றே சொல்லலாம். ஆனந்த ராஜும், நரேனும் உடல் மொழியிலும், டயலாக் டெலிவரியிலும் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என்பதை உணர்த்தி விடுகிறார்கள்.  கிங்ஸ்லி, கூத்துபட்டறை கலைராணி, R. சுந்தராஜன்,  மன்சூர் அலிகான்  மறைந்த நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா என அனைவரும் வரும் காட்சிகளில் கிச்சுகிச்சு மூட்டிவிடுகிறார்கள்.

மயில் சாமி, மனோபாலாவை திரையில் பார்க்கும் போது நல்ல நகைச்சுவை நடிகர்களை தமிழ் சினிமா இழந்து விட்டது என்றே சொல்ல தோன்றுகிறது.1980 களின் பின்புலத்தில் கதை நடந்தாலும் ஜிப்ரானின் இசை சமகாலத்தில் இருப்பதை போல உள்ளது. கதாநாயகி ப்ரீத்தி ராதிகா சந்தானத்தை காதலிப்பதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

லாஜிக் பார்க்காதீங்க, பெரிய எதிர் பார்ப்புகளுடன் படத்துக்கு போகாதீங்க. இப்படி போனா சந்தானம் அண்ட் கோ செய்யும்  இந்த பில்டப்பை பார்த்து ரசித்து சிரிக்கலாம்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT