வெள்ளித்திரை

விஜய் ஆண்டனியின் ஹிட்லர்!

ராகவ்குமார்

திரைப்படங்களுக்கு நெகடிவ் பெயர்களை வைப்பதும், நெகடிவ் பப்ளிசிட்டி செய்வதும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்தவகையில், உலகை நடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லர் பெயரை டைட்டிலாக வைத்து விஜய் ஆண்டனி படம் உருவாகிறது. 

D.R. சஞ்சய் குமார் தயாரிப்பில், தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல்  போஸ்ட்டரை படக்குழு  வெளியிடடுள்ளது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும்  விஜய் ஆண்டனியின் தோற்றம் ரசிகர்களிடம்  வரவேற்பைப் பெற்றுள்ளது.  

படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா, இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். 

ஹிட்லர் திரைப்படத்தை ஆக்‌ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா.  திருப்பங்களுடன் நகரும்  திரைக்கதையில், ஒரு அழகான காதலும்  இடம்பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு  சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார்.

முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறது தயாரிப்பு தரப்பு.

திப்பு சுல்தானை ஆங்கிலேயரிடமிருந்து காத்த திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமை தெரியுமா?

இவள் இருட்டில் மட்டுமே வருவாள்! 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

SCROLL FOR NEXT