Hansika 
வெள்ளித்திரை

"இது என் இடம்" திகிலூட்டும் ஹன்சிகாவின் கார்டியன் டீசர்... எப்படி இருக்கு?

விஜி

நடிகை ஹன்சிகாவின் கார்டியன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகா மீண்டும் நடிப்பில் அசத்தி வருகிறார். திருமணத்திற்க்கு பின் ஹன்சிகா ஆதியுடன் நடித்த பாட்னர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தொடர்ந்து மை 3 வெப்சீரிஸில் ரோபோவாக நடித்து அசத்தினார். தற்போது இவர் கார்டியன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

பேய் கெட்டப் எத்தனை நடிகைகளுக்கு பொருந்துமோ, நடிகை ஹன்சிகாவிக்கு கச்சிதமாகவே பொருந்தும். ஏற்கனவே இவர் சுந்தர் சி யின் அரண்மனை படத்தில் பேயாக நடித்து அசத்தியிருப்பார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் கார்டியன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

சபரி மற்றும் குருசரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஹன்சிகா பேயாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், பிரதீப் ராயன், டைகர் கார்டன் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

டீசர் எப்படி இருக்கு?

பேயாக வரும் ஹன்சிகா பல பேரோட உயிர எடுக்க காத்திட்டு இருக்கு என சொல்லப்படுகிறது. தொடர்ந்து அடுத்து வரும் காட்சிகளில் பேயாக காட்சி தரும் ஹன்சிகாவை பார்த்து அனைவரும் அலறியடித்து ஓடுகின்றனர். இறுதியாக நடிகை ஹன்சிகா, நீ கோயில்ல இருந்தாலே கொன்னு பொதச்சுடுவேன். இது என் இடம் என அவர் பஞ்ச் பேசும் வசனம் அனைவரையும் மிரட்டியுள்ளது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT