நடிகர் சந்தானத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பை நாளை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகராக மக்கள் மனதில் இடம்பெற்ற நடிகர் சந்தானம், தற்போது கதாநாயகனாக வலம் வருகிறார். இவரது சில படங்கள் நல்ல வரவேற்பை பெறாவிட்டலும், இவர் அயராது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த மாதம் இவர் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி கலவையான விமர்சனங்களை பெற்றன. இவர் ஹீரோவாக நடித்து வெற்றியடைந்த படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், தனது நடிப்பால் விரைவில் உயர்வேன் என்ற நம்பிக்கையில் ஓடி கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கோபுரம் பிளம்ஸ் நிறுவனத்தின் கீழ் சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் இயக்கத்தில் தான் நடிகர் சந்தானம் இணைந்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தில், பிரியாலயா, தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, மனோபாலா, பாலா சரவண உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 10.30 மணிக்கு நடிகர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.