தான் உயிரிழக்கப் போவதை உணர்ந்த பிரபல நடிகை தனது கோடிக்கணக்கான சொத்துக்களை ஏழை மாணவர்களுக்கு கொடுத்து உதவியுள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பழம்பெரும் நடிகர், நடிகைகள் பலர் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை செய்து மறைந்திருப்பார்கள். அது பெரிதளவு வெளியிலும் பேசப்பட்டிருக்காது. ஏதோ ஒரு பேட்டியில் யாராவது நினைவு கூறினால் மட்டுமே தெரியவரும். அப்படி தான் நடிகை ஸ்ரீவித்யா செய்த ஒரு செயல் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
பிரபல நடிகை ஸ்ரீவித்யாவை 80ஸ், 90ஸ் ரசிகர்களால் மறந்து விட முடியாது. ஸ்ரீவித்யா முன்னணி நடிகையாக இருந்து பிறகு பல நடிகைகளுக்கு அம்மாவாகவும் குணசித்திர வேடங்களிலும் ஸ்ரீ வித்யா நடித்திருந்தார். அவருடைய இறப்பு பலராலும் இப்பொழுது வரை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
அதுபோல ஸ்ரீவித்யா தனியாக வாழ்ந்து வந்த நேரத்திலும் மரண படுக்கையில் இருக்கும்போது தான் பார்க்க ஆசைப்பட்ட ஒரே நபர் கமல்ஹாசன் தானாம். 1973 ஆண்டில் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் நடிகை ஸ்ரீவித்யாவும் ஒன்றாக நடித்திருந்தனர். அதுபோல 1975 இல் வெளியான 'அபூர்வ ராகங்கள்' மற்றும் 'அன்னை வேளாங்கண்ணி' என்னும் ஒரு சில திரைப்படங்களில் கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த நேரத்தில் தான் கமல்ஹாசன் மீது நடிகை ஸ்ரீவித்யாவிற்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது.
இது குறித்து நடிகர் கமல் பல வருடங்களுக்கு முன்பு காபி வித் டிடி நிகழ்ச்சியில் பேசியதும் வைரலானது. 2003ம் ஆண்டு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தான் இறந்து போகவுள்ளதை உணர்ந்த ஸ்ரீவித்யா, அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான முடிவையும் எடுத்துள்ளார்.
தான் சேர்த்த கோடிக்கணக்கான சொத்துக்களை இசை, நடனக் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்க முன்வந்தார். நடிகர் கணேஷின் உதவியுடன் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் உதவிகள் செய்தார். 3 வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் 2006ம் ஆண்டு தனது 53வது வயதில் உயிரிழந்தார். இறக்கும் நேரத்தில் மற்றவர்களை மனதில் கொண்டு ஸ்ரீவித்யா செய்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.