Actress Tamannaah Bhatia
Actress Tamannaah Bhatia  
வெள்ளித்திரை

‘கல்லூரி’ யிலிருந்து ‘காவாலா’ பாடல் வரை! தமன்னா பிறந்தநாள் ஸ்பெஷல்...

பாரதி

மன்னா மும்பையில் 1989 ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மும்பையில் தான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த தமன்னா 13 வயதில் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டார்.

தமன்னா தனது 15 வயதில் 2005ம் ஆண்டு ‘சந்த் சா ரோஷன் செஹ்ரா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அதே வருடம் ‘ஸ்ரீ’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டே ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவருடைய முதல் சாதனை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று திரையுலகிலும் தடம் பதித்ததுதான். ஆனால் இந்த மூன்று படங்களுமே நன்றாக ஓடவில்லை என்றாலும் தமன்னா அடுத்த அடுத்தப் படங்களில் நடிக்க இது ஒரு மாபெரும் வாய்ப்பாக அமைந்தது.

தமன்னா நடித்து 2007 ம் ஆண்டு வெளியான ‘கல்லூரி’ என்ற தமிழ் படமும் ‘Happy days’ என்ற தெலுங்கு படமும் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டு படங்களிலுமே ஒரு கல்லூரி மாணவியாக நடித்து தனது அசாதரண நடிப்பின் மூலம் அனைவரையும் தன் வசம் திரும்பிப் பார்க்கச் செய்தார். 2008ம் ஆண்டு தெலுங்கில் கவனம் செலுத்திய தமன்னா, மூன்று தெலுங்குப் படங்களில் நடித்தார். அந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘நின்னா நேடு ரெப்பு’ என்ற படம் தமிழில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் வெளியானது.

இந்த படத்தில் தமன்னா ஒரு கேமியோ ரோல் மட்டுமே நடித்தார். தமிழ் திரையுலகில் 2009 ம் ஆண்டுத்தான் தமன்னாவின் வாழ்க்கையையே திருப்பிப்போட்ட ஆண்டாகும். அந்த ஆண்டு அவருக்கு ஒரு அதிர்ஷ்டமான ஆண்டு என்றும் கூறலாம். அதைவிட அவர் நடிப்பு திறமைக்கு மாபெரும் அங்கீகாரம் கிடைத்த ஆண்டு என்று கூறுவதே சரி. தனுஷுக்கு ஜோடியாக நடித்த ‘பொல்லாதவன்’ படம் அந்த ஆண்டின் முதல் வெற்றியாக அமைந்தது. அடுத்தப் படமே சூர்யாவுடன் ‘அயன்’ படம் நடித்து, தொடர் வெற்றிப்படம் கொடுத்தார் தமன்னா.

இவை மட்டுமல்லாது பரத்துடன் நடித்த ‘கண்டேன் காதலைப்’ படத்தில் அஞ்சலி என்ற தமன்னாவின் கதாப்பாத்திரம் இன்று வரை அனைவராலும் பேசப்பட்டு வரும் ஒரு கதாப்பாத்திரமாகும். இதனையடுத்து ‘ஆனந்த தாண்டவம்’ படம் என்று அந்த ஆண்டு பெரிய நடிகர்களுடன் கைக்கோர்த்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார் தமன்னா.

அடுத்து 2010ம் ஆண்டு வெளியான பையா, சுறா, தில்லாலங்கடி ஆகிய படங்களும் தமன்னாவிற்கு மாபெரும் வெற்றியையே கொடுத்தது. என்னத்தான் பெரிய நடிகர்களுடன் தமன்னா நடித்தாலும் அவருடைய கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தது. இந்த படங்களின் மூலமே தமன்னாவிற்கு இளைஞர் ரசிகர்கள் கூட்டம் பெரிதளவில் உருவானது. இந்த அடித்தளமே மிகவும் திடமாக இருந்ததால் சினிமா திரையுலகில் அவர் நிலைத்து நிற்க ஒரு காரணமாயிற்று.

தமன்னாவின் 2011ம் ஆண்டு வெளியான சிறுத்தை, வேங்கை; 2014ம் ஆண்டு வெளியான வீரம் , 2015ம் ஆண்டு வெளியான பாகுபாலி 1 பிறகு 2026ம் ஆண்டு வெளியான தோழா, தர்மதுறை, தேவி, கத்தி சண்டை ஆகிய படங்கள் தமிழில் ஹிட் படங்களாக அமைந்தன. பின்னர் 2017ம் ஆண்டு பாகுபலி 2 , அன்பானவன் அடங்காதவன் அசராதவன்; 2018ம் ஆண்டு வெளியான ஸ்கெட்ச் ஆகிய படங்கள் நல்ல வர்வேற்பை பெற்றன. பிறகு 2019ம் ஆண்டு வெளியான பெட்ரோமேக்ஷ், ஆக்ஷன் ஆகிய படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

அதன்பின்னர் ஹிந்தி, தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தமன்னா, சமீபத்தில் வெளியான ஜெய்லர் படத்தின் ‘காவாலா’ பாடல் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு கம்பேக் ட்ரீட் கொடுத்தார். ஆனால் இது ஒரு சிறு கம்பேக் என்றே கூற வேண்டும். அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் அரண்மனை பாகம் 4 படத்தின் மூலம் தமன்னா தமிழ் திரையுலகில் ஒரு ஸ்ட்ராங் கம்பேக் கொடுப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுபோக தமன்னா 2016ம் ஆண்டு வெளியான ‘ரன்வீர் சிங் ரிட்டர்ன்ஸ்’ என்ற குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் ‘நவம்பர் ஸ்டோரிஸ்’ உட்பட ஆறு வெப் சீரிஸ் நடித்துள்ளார். மற்றும் இரண்டு மியூசிக் வீடியோக்களுக்கு நடனம் ஆடியுள்ளார். தமன்னா தேவி, தர்மதுறை, பையா ஆகிய படங்களுக்கு சிறந்த நடிகை என்ற விருதுகளை வாங்கியுள்ளார். 2010ம் ஆண்டு உயரிய விருதான கலைமாமணி விருது உட்பட கிட்டத்தட்ட 45 விருதுகளை வாங்கியுள்ளார். தமன்னா, ஜப்பானின் ஷிசிடோ என்ற அழகு சாதன நிறுவனத்திற்கு முதல் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். இது அவரின் திறமைக்கும் அழகுக்கும் கிடைத்த ஒரு மதிப்புமிக்க பரிசு என்றே கூற வேண்டும் .

துடுப்பற்ற படகு பயணம் போலாகும் இலக்கற்ற வாழ்க்கை!

எப்படி வாழ்ந்தோம் என்று இருக்க வேண்டும் வாழ்க்கை!

இந்திய மசாலா பொருட்களுக்கு நேபாளத்தில் தடை!

Kitchen Queen's tips: சமையலில் ராணியாக சில சமையல் குறிப்புகள்!

பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT