வெள்ளித்திரை

அகிலன்: காட்சிகளில் மட்டுமே பிரம்மாண்டம்!

ராகவ்குமார்

ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைய்ன்மெண்ட் தயாரிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளி வந்துள்ள  படம் அகிலன்.    கடல் வழியே போதை பொருள் கடத்தும் ஒன்லைனில் வந்துள்ள மற்றும் ஒரு படம் அகிலன். ஏழைகளுக்கு உதவ திருடும், கடத்தல் செய்யும் பழைய ராபின் ஹூட் கதைதான் இது. 

அகிலன் ஒரு பெரிய கடத்தல் தலைவனுடன் இணைந்து ஒரு இன்டர்நேஷனல் கிரிமினலை கப்பலில் கடத்துகிறான். இதனால் கடத்தல் தலைவனின் நன் மதிப்பை பெறுகிறான்.    தமிழன்னை என்ற கப்பலை உருவாக்குகிறான். உன்னால் இந்த கப்பலை எப்படி உருவாக்க முடிந்தது என்று போலீஸ் அதிகாரி கேட்க உப்பு சப்பு இல்லாத ஒரு பிளாஷ் பேக்கை சொல்கிறான்.                 

அதாவது தனது அப்பா போரினால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ தமிழன்னை என்ற கப்பலை  உருவாக்கினார். இருந்தாலும் கடத்தல் காரர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் தற்சமயம் இதே பெயரில் கப்பல் உருவாக்கி ஏழை மக்களுக்கு உதவ போவதாக சொல்கிறான். கடத்தல் கும்பலும், அதிகாரி களும் அகிலனின் திட்டத்தை முறியடித்து தமிழன்னையை அழிக்கப்பார்கிறார்கள். அனைவரின் திட்டத்தையும் முறியடித்து வெற்றி பெறுகிறான் அகிலன். துறைமுகம், பெரிய கப்பல்கள் தவிர்த்து திரைக்கதையில் வேறெந்த புதுமையும் இல்லை.       

விவேக் ஆனந்த் சந்தோசம் ஒளிப்பதிவு மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகிறது.                                 

சாம். C. S இசை பல படங்களில் கேட்டது போலவே உள்ளது.

மிராக் மைக்கேலின் ஸ்டண்ட் காட்சிகள்  நெருப்பாக இருக்கிறது. துறைமுகத்தை கண்முன் காட்டிய ஆர்ட் டீமை பாராட்டலாம்.                     

ஜெயம் ரவி நடிப்பில் தனது பூலோகம் படத்தை நினைவுபடுத்துகிறார். பிரியா பவானி சங்கருக்கு காதலிப்பதை தவிர வேறு வேலை இல்லை. சிராக் ஜானி போலீஸ் அதிகாரியாக பாத்திரத்தில் பொருந்தி போகிறார்.               

கப்பலையும், துறைமுகத்தையும் காட்டினால் போதும் என்று டைரக்டர் நினைத்து விட்டார் போலும். திரைக்கதை என்ற சரக்கு இல்லாததால் கப்பல் தத்தளிக் கிறது.

அகிலன் - கலங்கரை விளக்கம் இல்லாத துறைமுகம்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT