வெள்ளித்திரை

‘சாகுந்தலம்’ பட வெளியீட்டில் மீண்டும் சிக்கல்!

கல்கி டெஸ்க்

காளிதாசன் எழுதிய புராணக் காவியமான சகுந்தலையின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்.’ இந்தப் படத்தில் பிரபல நடிகை சமந்தா சகுந்தலையாகவும், நடிகர் தேவ் மோகன் மன்னன் துஷ்யந்தனாகவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான காதலைச் சொல்லும் திரைப்படம்தான், ‘சாகுந்தலம்.’ இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப பெற்றது. அதோடு, இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதியே தியேட்டர்களில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் டப்பிங் மற்றும் 3D தொழில் நுட்பப் பணிகள் பூர்த்தியடையாததால் அப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அதோடு, இந்தப் படம் பிப்ரவரி மாதம் 17ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அப்படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, கௌதமி, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர, நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு ஆர்கா இந்தப் படத்தில் சகுந்தலையின் மகனாக, இளவரசன் பரதனாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். நீலிமா குணாவும் தில் ராஜுவும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாய் மாதவ் வசனம் எழுதி உள்ளார். மணி சர்மா இசை அமைத்துள்ளார். சேகர் வி.ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர் குணசேகர் இதற்கு முன் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான, ‘ருத்ரமாதேவி’ வெற்றிப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT