Actor soori 
வெள்ளித்திரை

பரோட்டா சூரி நடித்த முதல் படம் எது தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள சூரியின் முதல் தமிழ்த் திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இதுகுறித்த கூடுதல் தகவல்களை அளிக்கிறது இந்த சினிமாப் பதிவு.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக உருவெடுப்பது என்பது நாகேஷ் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. அவ்வரிசையில் கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் மற்றும் சதீஷ் போன்ற நடிகர்களின் வரிசையில் தற்போது சூரியும் இணைந்துள்ளார். கதாநாயகனாக நடிக்கும் காமெடி நடிகர்களின் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறாத நிலையில், சந்தானம் ஓரளவு தாக்குப்பிடித்து நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து மாஸான கதாநாயகனாக தமிழ் சினிமாவில் இடம் பிடித்துள்ளார் பரோட்டா சூரி.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வெளிவந்த விடுதலை முதல் பாகம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படமும் வசூலில் பட்டையைக் கிளப்பி, சூரிக்கு மற்றொரு வெற்றியைத் தந்துள்ளது. இனி சூரியை காமெடி நடிகராக பார்ப்பது கடினம் என்றும், கதாநாயகனாக தனது நடிப்பை திறம்படச் செய்திருக்கிறார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்து சூரி நடிப்பில் வெளிவர இருக்கும் ஏழு கடல் ஏழு மலை மற்றும் கொட்டுக்காளி திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறும் என நம்பப்படுகிறது.

சூரி காமெடி நடிகராக வலம் வருவதற்கு முன்னதாக பல படங்களில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் சூரி நடித்துள்ள முதல் திரைப்படம் எதுவென தற்போது வெளியாகி உள்ளது. படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க அப்போது ஏவிஎம் ஸ்டூடியோ முன் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். அந்த இடத்திற்கு சூரியும் சென்று என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று கெஞ்சுவாராம். அந்த சமயத்தில் இவருக்கு உதவியது சுமதி என்ற பெண் தான். இவர் உதவி இயக்குநரிடம் சென்று இந்தப் பையன் அதிக நேரமாக கெஞ்சிகிட்டே இருக்கான். இவனையும் சேர்த்துக் கொள்ளலாம் என சிபாரிசு செய்துள்ளார். அப்படி கூட்டத்தோடு கூட்டமாக சூரி நடித்த முதல் படம் தான் மறுமலர்ச்சி. மம்முட்டி தேவயானி நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியத் திரைப்படமாக பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு தான் சூரிக்கு பல படங்களில் சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் வெளியில் தெரியாமலேயே இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் தான் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் காமெடியில் கலக்கி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். இப்படத்தில் வரும் பரோட்டா காமெடி இன்றளவும் பேசப்படுகிறது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியதால் பல காமெடி வாய்ப்புகள் சூரிக்கு கிடைத்தது. இதனைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட சூரி இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT