வெள்ளித்திரை

அனுமனுக்கு சினிமா தியேட்டரில் இருக்கையா ? கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

கல்கி டெஸ்க்

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்

இந்நிலையில் “ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியின்போதும் அனுமனுக்காக ஒரு இருக்கையை காலியாக ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என ‘ஆதி புருஷ்’ படத்தின் இயக்குநர் ஓம் ராவத் கண்ணீர் மல்க, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.

படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் நடைபெற்றது. இதில் படத்தின் புதிய ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், “ராமயணம் எப்போதெல்லாம் அரங்கேற்றப்படுகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்க்க அனுமன் வருவார் என என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். எனவே ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன் என்றார்

பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், அதன் கிராபிக்ஸின் தரம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியான போது, அதன் மோசமான கிராபிக்ஸால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. இதன் எதிரொலியாக படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து படக்குழு புதுப்பித்தது. மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸுடன் இப்படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது. இதன் கிராபிக்ஸ் தரம் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவான படத்தின் கிராபிக்ஸ் சாதாரண வீடியோ கேமில் வரும் கிராபிக்ஸ் போன்ற இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் அனுமனுக்கு சினிமா தியேட்டரில் இருக்கையா என கலாய்த்து தள்ளும் நெட்டிசன்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது படக்குழு

விண்வெளியில் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க முடியுமா?

தொற்று நோய்களைப் புரிந்துகொள்வது எப்படி?

வரமிளகாய் வத்தக்குழம்பும், ஸ்பைசி தொண்டக்காய் வறுவலும்!

இது தெரிஞ்சா இனி நீங்க பிரட் சாப்பிடவே மாட்டீங்க! 

லடாக் பயண தொடர் 5 - ஐந்து நிமிடங்களுக்கு மேல் இங்கே நிற்க அனுமதி இல்லை... அப்படி நின்றால்...?

SCROLL FOR NEXT